'இங்கிலாந்துக்கு' பரவிய '50%' கொரோனா 'தொற்றுக்கு...' 'இந்த நாடு தான் காரணம்...' 'தி மெயில் ஆன் லைன்' செய்தி நிறுவனம் 'குற்றச்சாட்டு...'
முகப்பு > செய்திகள் > உலகம்வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் பாகிஸ்தான்தான் என தி டெலிகிராப் என்ற பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது.
இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 4,000 கொரோனா பாதிப்புகள் பதிவாகிறது. ஊரடங்கு மூலமாக நோய் பரவலைக் கட்டப்படுத்தினாலும், ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் இந்த நோயில் புதிய உயர்வு காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன என ஆராய்ந்த போது, நோய் பரவலுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
பிரபல இங்கிலாந்து பத்திரிகையான மெயில் ஆன் லைன் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து வந்தவர்கள் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு கொரோனாவைக் கொண்டுவந்தவர்களில் பாதிபேர் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து மார்ச் 1 முதல் 190 விமானங்களில் 65,000க்கு அதிகமானவர்கள் இங்கிலாந்துக்கு வந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்றும் தி டெலிகிராப் என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது.
நாளொன்றிற்கு பாகிஸ்தானிலிருந்து இரண்டு விமானங்கள் இங்கிலாந்து வரும் நிலையில், சில நேரங்களில் பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்து வந்திறங்கும் சிலர் நேரடியாக மருத்துவமனைகளுக்கே சென்று தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானில் சுமார் 200,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், சுமார் 4,000 பேர் பலியாகியுள்ளார்கள்.இப்படிப்பட்ட சூழலில், வெளிநாடுகளிலிருந்து இங்கிலாந்துக்கு பரவிய 50 சதவிகித கொரோனா தொற்றுக்களுக்கும் காரணம் பாகிஸ்தான் தான் என தகவல் வெளியானதையடுத்து, அதிக அபாயமுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளை கடுமையான சோதனைகளுக்குள்ளாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாயங்காலம்' ஆனா ஆரம்பிச்சுடுறாங்க... வடசென்னையை கட்டுப்படுத்த... களமிறங்கிய 'கமாண்டோ' வீரர்கள்!
- 'வேற' வழி தெரில: ஜூலை 31 வரை 'ஊரடங்கை' நீட்டிப்பதாக... அடுத்தடுத்து 'அறிவித்த' மாநிலங்கள்!
- துளிர்விடும் நம்பிக்கை: 'இந்த' 4 மாநிலங்கள்ல... கொரோனா 'உயிரிழப்பு' சுத்தமா கெடையாது!
- டிரைவருக்கு கொரோனா: பாதி வழியில் 'இறங்கி'... வேறு காரில் 'பயணம்' செய்த அமைச்சர்!
- 'கொரோனா'வின் 2-வது அலை அபாயம்... 'அதிகமுள்ள' நாடுகள் பட்டியல்!
- "டெய்லி எதுக்குங்க இவ்ளோ கொரோனா கேஸ் வருது?".. டெபியுட்டி கமிஷனரை சேரைத் தூக்கி அடிக்கச் சென்ற கட்சி பிரமுகர்! பரபரப்பு வீடியோ!
- "ஸ்மார்ட்போன் மூலமா ஆன்லைன் வகுப்பு!".. 'இப்படி ஒரு' சூழ்நிலையால்.. 'பள்ளி மாணவர்' எடுத்த சோக 'முடிவு'!
- 'அமெரிக்கா' அதிகாரப்பூர்வமாக 'அறிவித்ததை விட...' '7 மடங்கு அதிகம்...' 'உண்மையான' கொரோனா 'பாதிப்பை...' 'அம்பலப்படுத்தியது சுகாதாரத்துறை...'
- மதுரையில் மேலும் 190 பேருக்கு பாதிப்பு!.. சேலத்திலும் தொடர்கிறது கொரோனாவின் கொடூரம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- கருவாட்டுக்கு வந்த 'திடீர்' கிராக்கி ... சர்ரென 'எகிறிய' விலை... என்ன காரணம் தெரியுமா?