"நான் நம்புற மனுஷன கண்டுபுடிச்சுட்டேன்".. தன்னை விட 13 வயது குறைவான நபரை திருமணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி!!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி தற்போது தன்னை விட 13 வயது குறைவான நபரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ஆகவும் செயல்பட்டு வந்தவர் இம்ரான் கான். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விலகி இருந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகவும் செயல்பட்டிருந்தார்.
இம்ரான் கான் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிஹாம் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு ஒரு ஆண்டில் அவர்கள் விவாகரத்து செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக லிபியாவில் பிறந்த ரிஹாம் கான், இங்கிலாந்தில் ஒளிபரப்பு பத்திரிகையாளராக பணியாற்றி வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்ற பிறகு உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இம்ரான் கானை அவர் நேர்காணல் செய்த போது சந்தித்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தான், கடந்த 2015 ஆம் ஆண்டு இம்ரான் கான் மற்றும் ரிஹாம் கானைத் திருமணம் செய்து கொண்டதுடன் மட்டுமில்லாமல் ஒரே ஆண்டுக்குள் அவர்கள் பிரிந்தும் விட்டனர்.
அப்படி ஒரு சூழலில் தற்போது 49 வயதாகும் ரிஹாம் கான், 36 வயதான மிர்சா பிலால் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகர் மற்றும் மாடலாக மிர்சா இருக்கும் நிலையில், ரிஹாமுக்கு இது மூன்றாவது திருமணம் ஆகும்.
அமெரிக்காவில் வசித்து வரும் ரிஹாம் கான், தன்னுடைய சமூக வலைத்தள பதிவில், அமெரிக்காவின் சியாட்டிலில் மிர்சாவின் பெற்றோர் சம்மதத்துடன் எங்கள் திருமணம் அழகாக நடைபெற்றது என்றும் இறுதியாக நான் நம்பக்கூடிய ஒரு மனிதரை கண்டுபிடித்தேன் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ரிஹாம் கான் மற்றும் மிர்சா பிலால் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தந்தை கண் முன் இளம்பெண் கடத்தல்.. மாலையில் திருமண கோலத்தில் வீடியோ?!.. அதிர்ச்சி பின்னணி!!
- ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு..!
- "அந்த மேட்ச்-க்கு பிறகு.. பாகிஸ்தான்ல ஒரு கடைக்கு போனா கூட...".. முகமது ரிஸ்வான் சொன்ன உருக்கமான தகவல்!!
- காதல் மனைவிக்கு கழுதை குட்டி பரிசு.. கல்யாண விருந்தில் நடந்த சம்பவம்.. அதுக்கு அவர் ஒரு காரணம் சொன்னாரு பாருங்க.. வைரல் வீடியோ..!
- கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் காதலனுடன் கண்டுபிடிப்பு.. 7 வருஷம் கழிச்சு வழக்கில் வந்த திடீர் திருப்பம்..!
- காதலனை மறக்க மந்திரவாதியிடம் அழைத்துப்போன பெற்றோர்.. கடைசியில மகள் வச்ச டிவிஸ்ட்..!
- நண்பருக்கு பெண் பாக்க போன இடத்தில்.. 78 வயது முதியவருக்கு மலர்ந்த காதல்.. திருமணத்தில் முடிந்த நெகிழ்ச்சி சம்பவம்!!
- மெடிக்கல் போயிட்டு வர்றேன்னு போன கணவர்.. Wait பண்ண மனைவிக்கு 1 1/2 வருஷம் கழிச்சு காத்திருந்த ஷாக்!!
- 70 வயது நபரின் மனைவிக்கு 19 வயசு.. "வாக்கிங் போன இடத்தில் பாட்டு பாடி இம்ப்ரஸ் பண்ண 50'ஸ் கிட்..
- தம் வீட்டு பணியாளர் மீது காதலில் விழுந்த செல்வந்த பெண்.. உருக வைத்த காரணம்..!