'இதுக்கு மேல ஒருத்தரை அசிங்கப்படுத்த முடியுமா'?... 'மேனேஜரை கேலி செய்த உணவக உரிமையாளர்கள்'... வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உணவகம் ஒன்றின் உரிமையாளரான இரண்டு பெண்கள், அவர்களின் மேலாளரிடம் நடந்து கொண்டு விதம் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் பகுதியில் 'Cannoli by Cafe Soul' என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. உஸ்மா (Uzma) மற்றும் தியா (Diya) என்ற இரண்டு பெண்கள் இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் ஆவர். இந்நிலையில், தங்கள் உணவகத்தில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மேலாளர் அவாய்ஸ் (Awais) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடக் கூடிய இந்த வீடியோவில், முதலில் அந்த மேலாளரிடம், ஆங்கிலம் எந்த அளவுக்கு தெரியும் என்பது குறித்து உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன்பிறகு, மேலாளரிடம் 'நீங்கள் ஆங்கிலத்தில் எதாவது பேச முடியுமா?' என கேட்க, இதற்கு பதிலளித்த அவாய்ஸ், தன்னை ஆங்கிலத்தில் சிரமப்பட்டு அறிமுகம் செய்கிறார்.

 

இதனைக் கேட்ட அந்த இரண்டு உரிமையாளர்களும் சிரித்த நிலையில், இது தான் எங்களது மேலாளர் பேசும் அழகான ஆங்கில மொழி என்றும், இதற்காக தான் அவருக்கு அதிக சம்பளத்தை கொடுக்கிறோம் என்றும் கிண்டலாக உரிமையாளர்களில் ஒருவர் தெரிவித்தார். இந்த வீடியோ சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் வெளியான நிலையில், சில நிமிடங்களிலேயே பாகிஸ்தானின் சிறந்த ட்விட்டர் டிரெண்டாக, #BoycottCannoli என்பது மாறியுள்ளது.





 

இதனைத் தொடர்ந்து, இந்த உணவகத்தின் உரிமையாளர் இருவரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்