"பாகிஸ்தான் திவாகிவிட்டது".. குண்டை தூக்கிப்போட்ட பாதுகாப்பு அமைச்சர்.. அதிர்ச்சியில் மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்நாடு ஏற்கனவே திவாகிவிட்டதாக பேசியிருப்பது அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | துருக்கி நிலநடுக்கம்: காப்பாற்றியவரை விட்டு இறங்க மறுத்த பூனை.. நெகிழ வைக்கும் வீடியோ..!

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெறுவதாக அறிவித்தன. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க் கட்சிகள் முடிவெடுத்திருந்த நிலையில் கடந்த ஏப்ரலில் பதவி விலகினார் இம்ரான் கான்.

இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், பாகிஸ்தானின் அந்நிய செலவாணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதனை தொடர்ந்து, மின்சார உற்பத்தி கடுமையாக பாதிப்பை சந்தித்தது. இதனால் ஷாப்பிங் மால்கள் ஆகியவற்றை இரவில் திறந்திருக்க கட்டுப்பாடு விதித்தது பாகிஸ்தான். இது, செல்போன் டவர் பராமரிப்பிலும் பிரதிபலித்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதன் காரணமாக சில மாகாண மக்கள் செல்போன் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என அந்நாட்டு அதிபர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் (Khwaja Asif), நாடு ஏற்கெனவே திவாலாகிவிட்டதாக பேசியிருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார் க்வாஜா ஆசிஃப். அந்த விழாவில் பேசுகையில்,"பாகிஸ்தான் கடனை திருப்பி செலுத்தவில்லை எனவும், நாட்டில் பொருளாதாரம் சரிந்துவிட்டது எனவும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். அது உண்மை தான். பாகிஸ்தான் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. அதனை செய்ய நாடு தவறிவிட்டது. நாம் இப்பொது திவாலாகிவிட்ட நாட்டின் குடியிருப்பாளர்கள். இது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. மக்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும். இந்த சிக்கலுக்கான தீர்வு நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால், நாம் சர்வதேச நாணய நிதியத்தை (IMF) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் பாகிஸ்தான், ஏற்கனவே திவாலாகிவிட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் பேசியிருப்பது, அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | கால் இடறி கீழே விழுந்த சம்பவம்.. பரபரப்புக்கு மத்தியில் ஜாலியாக கமெண்ட் கொடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்..!

PAKISTAN, PAKISTAN DEFENCE MINISTER, KHAWAJA ASIF, DEFENCE MINISTER KHAWAJA ASIF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்