“எங்களுக்காக இப்படி எங்க நாடு வரலயே?”.. “இந்திய மாணவ நண்பர்களை ஏக்கத்துடன் பார்க்கும் பாகிஸ்தான் மாணவர்கள்!”... உருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கொரோனா வைரஸால் தவித்து வரும் பாகிஸ்தான் மாணவர்களை மீட்க போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்திய அரசை போல் தங்களுடைய பாகிஸ்தான் அரசும் தங்களை மீட்க வேண்டும் என ஏக்கத்துடன் அந்த மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுவரை சீனாவில் கொரோனா வைரசால்  300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், 11,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,  இந்த வைரஸ் உருவான வூஹான் நகரில் இருந்த 324 இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவின் மத்திய அரசு மீட்டது. தவிர, இன்று மேலும் 323 பேர் மீட்கப்பட்டு ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லி அழைத்து வரப்பட்டனர்.

ஆனால் அதே நகரில் தவித்து வரும் பாகிஸ்தான் மாணவர்கள்,

தங்களுடன் பயிலும் சக இந்திய மாணவர்கள் இந்திய அரசால் மீட்கப்படுவதை ஏக்கத்துடன் பார்க்கும் வீடியோக்கள் வெளியாகி உருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், பாகிஸ்தான் அரசோ தங்கள் மாணவர்களை மீட்க போவதில்லை என தெரிவித்துள்ளது.   இதனிடையே, பாகிஸ்தான் மாணவர்  ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வூஹான் பல்கலைக் கழகத்தில், குறிப்பிட்ட 4 மணி நேரம் தவிர, மற்ற நேரங்களில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் அடைந்து கிடப்பதாகவும்,  தங்களின் நாட்களை எண்ணி கொண்டுள்ளதாகவும், விரைவில் தங்கள் அரசு தங்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதேபோல், பாகிஸ்தான் மாணவர்களை மீட்க வேண்டும் என்பதை வலியிறுத்தும் #Pakistanistudents ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

COLLEGESTUDENTS, CORONA, CHINA, INDIA, PAKISTAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்