‘தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில்’.. ‘இளம்பெண்ணின் பிரேதப் பரிசோதனையில்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்’..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி உயிரிழப்பதற்கு முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் மருத்துவக்கல்லூரியில் படித்துவந்த நம்ரிதா எனும் மாணவி கடந்த செப்டம்பர் மாதம் தனது விடுதி அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.  அது தற்கொலை என கல்லூரி நிர்வாகம் கூறிவந்த நிலையில், நம்ரிதா கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவருடைய குடும்பத்தினர் இதுகுறித்து போலீஸார் உரிய விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

இதையடுத்து நிம்ரிதாவின் டிஎன்ஏ மாதிரிகளை தடவியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்ததில் அவருடைய உடல் மற்றும் ஆடையில் ஆணின் டிஎன்ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருடைய பிரேதப் பரிசோதனையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

நம்ரிதா மூச்சுத்திணறி உயிரிழந்ததும், உயிரிழப்பதற்கு முன் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தற்கொலை எனக் கூறப்பட்ட மாணவியின் மரணம் தற்போது கொலை என உறுதியாகியுள்ள நிலையில், கொலையாளியயைப் பிடிக்க போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

PAKISTAN, HINDU, GIRL, MURDER, RAPE, SUICIDE, MEDICAL, STUDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்