"இனி போன்களை பயன்படுத்த முடியாத நிலை வரலாம்"..பகீர் கிளப்பிய பாகிஸ்தான் அரசு.. பரபரப்பில் மக்கள்... முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மின்வெட்டு காரணமாக மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்துவது குறித்து பாகிஸ்தான் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் (NITB) மக்களுக்கு எச்சரிகை விடுத்துள்ளது.
Also Read | வாழ்த்த வந்த வயதான நபர்.. டக்குன்னு காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கிய நீரஜ் சோப்ரா.. வைரல் வீடியோ..!
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதன் காரணமாக எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனை தொடர்ந்து இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப் பெற்றதை தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகினார். இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ன் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அங்கே, பொருளாதார நெருக்கடிகள் சீராகவில்லை. இதன் காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளது.
சேவை பாதிப்பு
பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி கணிசமான அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்த நேரிடலாம் என பாகிஸ்தான் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் ட்விட்டர் பக்கத்தில்,"பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், நாடு முழுவதும் நீண்ட நேரம் மின்சாரம் தடைப்படுவதால் மொபைல் மற்றும் இணைய சேவைகளை நிறுத்துவது குறித்து எச்சரித்துள்ளனர். மின்தடை காரணமாக பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், வரும் ஜூலை மாதத்தில் நாட்டில் மின்வெட்டு அதிகரிக்கலாம் என எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து , பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்," நாட்டுக்கு தேவையான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) விநியோகத்தை பெற முடியவில்லை, இருப்பினும், கூட்டணி அரசாங்கம் ஒப்பந்தத்தை சாத்தியமாக்க முயற்சிக்கிறது" என கூறியுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு சிரமங்களை சந்தித்துவரும் பாகிஸ்தான் மக்கள், மின்தட்டுப்பாடு காரணமாக அரசு விடுத்திருக்கும் இந்த எச்சரிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்