ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டது ஏன்?.. ஒரு சிறிய தவறால்... உலகம் முழுமைக்கும் பின்னடைவு!.. அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக நாடுகளுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஆக்ஸ்ஃபோர்ட் கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை நிறுத்தப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து தான் தடுப்பூசி போட்டியில் முன்னணியில் இருந்து வருகிறது.

மேலும், அது மனித பரிசோதனைக் கட்டத்தில் நல்ல முடிவுகளை அளித்து வந்ததால், உலக சுகாதார அமைப்பின் பாராட்டுதலையும் பெற்றிருந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பரிசோதனையை சில நாடுகள் அதிரடியாக நிறுத்தின.

இதுகுறித்து அம்மருந்தை தயாரித்து வரும் நிறுவனமான ஆஸ்ட்ரா ஜெனகா கூறுகையில், "தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்ட பெண் ஒருவருக்கு நரம்பியல் தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், முதுகு தண்டுவடத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது மிகத் தீவிரமான பக்கவிளைவாக கருதப்படுகிறது. எனவே, தடுப்பு மருந்து பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்திவைக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் 30,000 த்துக்கும் அதிகமான தன்னார்வலர்களிடம், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான பக்கவிளைவுகளால் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டிருப்பது, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதை உலக மக்களுக்கு உணர்த்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்