‘கொண்டாடப்பட்ட தடுப்பூசி’... ‘ஆரம்பத்திலேயே வந்த சோதனை’... ‘தவறை ஒப்புக்கொண்ட நிறுவனம்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சேர்ந்து கொரோனா தடுப்பூசியில் உற்பத்தி பிழை ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் போட்டி போட்டு வேலை செய்கின்றன.

இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய  விலை மலிவான, சுலபமாக தயாரிக்கக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த கோவிட் தடுப்பூசிக்கு ஒரு கப் காபிக்கு குறைவாகவே செலவாகும் என்று குறிப்பிட்டு, இங்கிலாந்து ஊடகங்கள் கொண்டாடின. இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிட் தடுப்பூசிகள் "மிகவும் பயனுள்ளவை" என்று கூறிய சில நாட்களில், உற்பத்தி பிழை ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது, சோதனைக்காக 2 முழு டோஸ்களை கொடுத்து பரிசோதனை செய்த குழுவில், தடுப்பூசி 62 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்துள்ளது. அதுவே, குறைந்த டோஸ்களை கொண்டு பரிசோதனை செய்த குழுவில் 90 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்துள்ளது.

இதனால் இந்த தடுப்பூசியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. தடுப்பூசியின் செயல்திறனில் வெவ்வேறு டோஸ்களில் ஏன் இவ்வளவு பெரிய மாறுபாடு இருந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிறிய டோஸ் ஏன் சிறந்த முடிவுகளைத் தோற்றுவித்தது என்றும், அதே அதிகளவில் டோஸ்கள் கொடுக்கப்பட்டும் குறைந்த முடிவையே தந்ததும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.

அஸ்ட்ரா செனகாவின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் தெரிவிக்கையில், சோதனைகள் மிக உயர்ந்த தரத்திற்கு நடத்தப்பட்டதாக கூறினார். டோஸ்களில் ஏற்பட்ட பிழை ஒரு ஒப்பந்தக்காரரால் ஏற்பட்டது என்றும், அது கண்டுபிடிக்கப்பட்டவுடன், கட்டுப்பாட்டாளர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பூசியை வெவ்வேறு அளவுகளில் தொடர்ந்து பரிசோதிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார். தடுப்பூசியின் முடிவுகள் தெளிவாக இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளரும் தடுப்பூசி சோதனை வடிவமைப்பில் நிபுணருமான நடாலி டீன் கூறும் போது அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை முடிவுகளுக்கு வரும்போது வெளிப்படைத்தன்மைக்கு ஒரு மோசமான தரத்தைப் பெறுகின்றன என்று கூறியுள்ளார். இது கொரோனா தொற்று நோயினை தீர்ப்பதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்