'தடுப்பு மருந்து விவகாரத்தில... இவ்ளோ நாள் சைலண்டா இருந்தது இதுக்கு தானா'!?.. டிரம்ப் கொடுத்த 'ஷாக்'!.. திகைத்துப்போன உலக நாடுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை எட்டிவிட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தடுப்பூசி தற்போது மனிதப் பரிசோதனையில் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்ட்ரா செனக்கா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரிக்கும் தடுப்பு மருந்து 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை எட்டிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப், "ஆஸ்ட்ரா செனக்கா தடுப்பு மருந்து அமெரிக்காவில் 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை எட்டிவிட்டது என்பதை அறிவிப்பதில்  நான் மகிழ்ச்சி அடைகிறேன். இறுதி கட்ட பரிசோதனையை எட்டிவிட்ட பல்வேறு தடுப்பு மருந்துகளுடன் ஆஸ்ட்ரா செனக்காவும் இணைந்துள்ளது. சாத்தியம் இல்லாதது என்பதை அமெரிக்கா செய்து காட்டியிருக்கிறது. தடுப்பு மருந்துக்கான நடைமுறைகள் பல ஆண்டுகளை எடுக்கும். ஆனால், எனது  நிர்வாகம் துரிதப்படுத்தி சில மாதங்களிலேயே முடித்துள்ளது" என்றார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து, அமெரிக்காவில் உள்ள 80 இடங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்