'சீனாவில் உணவுக்காக திருடப்பட்ட 700 பூனைகள்...' 'ப்ளீஸ் அவங்கள காப்பாத்துங்க...' இல்லன்னா உங்க டேபிள்ல உணவாயிடுவாங்க...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

திருட்டு போன சுமார் 700-க்கும் மேற்பட்ட பூனைகள் உணவிற்காக கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் சீனாவின் தெற்கு ஷாங்க்சி மாகாணத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சீனாவின் உணவு பழக்கமானது மிகவும் தனித்துவமானது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. சீனாவின் சில பகுதிகளில் வாழும் மக்கள் விலங்குகளை உயிருடன் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்கு இதுவும் ஒரு காரணம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சீனாவின்  ஷாங்க்சி மாகாணத்தின் லின்ஃபென் நகரில் திருடப்பட்ட 700-க்கும் மேற்பட்ட பூனைகள் சிறிய துருப்பிடித்த கூண்டுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சிறிய துருப்பிடித்த கூண்டுகளில் அளவிற்கு அதிகமான பூனைகளை அடைத்து வைத்துள்ளதால் அவை மூச்சு விடமுடியாமலும், ஒன்றுக்கொன்று இடித்து கொண்டு வலியால் துடிக்கும் காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஓட்டலில்களில் இறைச்சிக்காக விற்பனை செய்யவே இந்த பூனைகள் திருடப்பட்டுள்ளதாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்த விலங்கு நல ஆர்வலரான எம்.எஸ்.லீ  கூறியுள்ளார். அந்த வீடியோவை ஆன்லைனில் போட்டு, 'அவர்கள் மேஜையில் உணவாக வழங்க காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள்' என்று கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

உடனடியாக உள்ளூரில் இருக்கும் விலங்கு மீட்புக் குழு சுமார் 700-க்கும் மேற்பட்ட பூனைகளை ஒரு கொடுமையானவர்களிடம் இருந்து காப்பாற்றியது. மீட்கப்பட்ட பூனைகளை சில தன்னார்வலர்கள் கவனித்து வருவதோடு, திருடப்பட்ட பூனைகளை அதன் உரிமையாளர்களோடு சேர்த்து வைக்க போவதாக மீட்புக் குழு இன்று தெரிவித்துள்ளது.

உஹானில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, விலங்குகள் மற்றும் வன விலங்குகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை சீனா கடுமையாக கடைபிடிப்பதாக தெரிவித்தது. மேலும் இரண்டு நகரங்கள் நாய்கள் மற்றும் பூனைகளை உட்கொள்வதை தடை செய்தன, இருப்பினும் தற்போது ஊரடங்கிற்கு பிறகு பல விலங்கு விற்பனை மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்