VIDEO: ‘கொரோனா வைரஸ் பீதி’!.. ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய 1500 கைதிகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரேசில் சிறையில் இருந்து 1500 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகின் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 7000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பிரேசில் நாட்டில் 234 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டு சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள 4 சிறைசாலைகளில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளான 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் கொரோனா பீதி காரணமாக தப்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து தப்பிச் சென்ற கைதிகளை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'!
- 'கொரோனா'வுக்கு எதிராக தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு!... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி!... கதறிய பாதிரியார்!... பதைபதைக்க வைக்கும் கோரம்!
- ‘மும்பையில் அலுவலகத்தை மூடிய பிசிசிஐ’... ‘ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’... விபரங்கள் உள்ளே!
- ‘என் மகனை பார்த்து 2 வாரம் ஆச்சு’.. ‘வீடியோ கால்தான் ஆறுதல்’.. ராத்திரி பகலா தூக்கமில்லாமல் உழைக்கும் நர்ஸ்களின் சோகக்கதை..!
- ‘கொரோனா அச்சம்’!.. ‘இனி வீட்டுல இருந்தே எடுத்துட்டு வந்துருங்க’.. இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!
- VIDEO: ‘இப்போ எப்டி அட்டாக் பண்ணுதுனு பாப்போம்’.. கொரோனா வைரஸ்-க்கு டஃப் கொடுக்கும் ‘அல்ட்ரா லெவல்’ ஐடியா..!
- 'கொரோனா' அறிகுறியுடன் வந்த '4 பேர்'... 'சாப்பிட்டு' வருவதாக கூறி 'தப்பியோட்டம்'... 'போலீசார்' தீவிர தேடுதல் 'வேட்டை'...
- 'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’!
- ‘ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு’... ‘திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி புதிய தகவல்’!
- “இதெல்லாம் வெளியில சொல்லலாமா? மக்கள் எப்படி வருவாங்க?”.. மருத்துவமனையின் கேள்விக்கு அனல் பறக்கும் பதில்! பெண் மருத்துவருக்கு பெருகும் ஆதரவு!