இதுவரை இப்படி ஒன்ன யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.. "ஒரே போட்டோ-ல 100 மில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரம்" .. நாசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் குறித்துதான் உலகமே பரபரப்புடன் பேசிவருகிறது.

Advertising
>
Advertising

Also Read | நிலவுல இருக்கும் மர்ம குகை... ஆய்வு செஞ்சப்போ தெரியவந்த உண்மை.. சந்தோஷத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள்..!

ஹப்பிள் தொலைநோக்கி

விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகள் எப்போதுமே புதிய புதிய தகவல்களை நமக்கு அளித்து ஆச்சர்யப்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றன. நம்முடைய சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள கிரகங்கள், அவற்றின் இயக்கம் குறித்து ஆராய விண்வெளியில் பிரம்மாண்ட தொலைநோக்கிகள் ஏவப்படுகின்றன. இவற்றின் உதவியோடு பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருப்பவற்றையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. அந்த வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா-வால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது தான் இந்த ஹப்பிள் தொலைநோக்கி.

கிட்டத்தட்ட 31 வருடங்களாக விண்வெளியில் இயங்கிவரும் இந்த தொலைநோக்கி பல அரிய தகவல்களை நமக்கு அளித்திருக்கிறது. அந்த வகையில் இந்த தொலைநோக்கி கடந்த 2015 ஆம் ஆண்டு எடுத்த ஒரு புகைப்படம் தற்போது மீண்டும் நாசாவால் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதேமாதிரி அல்ல. புகைப்படங்களை தொகுத்து, முக்கியமானவற்றை ஒரே புகைப்படமாக வெளியிட்டுள்ளது நாசா.

100 மில்லியன் நட்சத்திரம்

நமது பால்வழி அண்டத்திற்கு அருகே உள்ள ஆண்ட்ரோமேடா கேலக்சியைத்தான் இந்த ஹப்பிள் தொலைநோக்கி படம் எடுத்திருக்கிறது. இதில் 411 பகுதிகளில் எடுக்கப்பட்ட 7,398 தரவுகளை ஒரே புகைப்படமாக நாசா வெளியிட்டுள்ளது. தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாவது படம் நீல வளையம் போன்ற அமைப்பில் நட்சத்திரங்களை காட்டுகிறது. 48,000 ஒளிஆண்டுகள் தூரத்தை தொகுத்து புகைப்படமாக நாசா பகிர்ந்திருக்கிறது. இதில் 100 மில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பதாக நாசாவின் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆண்ட்ரோமேடாவின் வடிவம், பால்வழி மண்டலத்தின் வடிவத்தை போன்று அமைந்திருப்பதால் இதுகுறித்த ஆராய்ச்சிகள் பால்வழி மண்டலம் பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வர உதவும் என நாசா தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

 

Also Read | என்னங்க இது.. வானவில் கலர்ல இருக்கு.?.. இதுவரையும் புளூட்டோவை இப்படி யாருமே பார்த்திருக்க மாட்டாங்க.. நாசா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்.!

NASA, ANDROMEDA GALAXY, NASA RELEASE PICTURE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்