'நாங்க சொன்னத நம்பியா ஆப்கானை விட்டு போனீங்க'... 'யாரு வந்திருக்கான்னு பாரு'... 'அமெரிக்காவை தெளியவச்சு அடிக்கும் தாலிபான்கள்'... அதிரவைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்எந்த தீவிரவாத இயக்கத்திற்கும் அடைக்கலம் கொடுக்க மாட்டோம் என தாலிபான்கள் அமெரிக்காவிடம் உறுதி மொழி கொடுத்திருந்தார்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்த உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரம் கட்டிடத்தை அல்-கொய்தா தீவிரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி விமானங்களை மோதி தகர்த்தனர். உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கோரச் சம்பவத்திற்குக் காரணமான அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளைக் களையெடுக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்து, ஆப்கானிஸ்தான் மீது போரை அறிவித்தது. அங்குத் தனது படைகளை நிறுத்தி தீவிரவாதிகளையும், தாலிபான்களையும் அமெரிக்கா ஒடுக்கியது.
இந்நிலையில் 20 வருடங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் படைகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்த அமெரிக்க, அங்கிருக்கும் தனது படைகளை வெளியேற்றியது. அமெரிக்கா தனது படைகளை வெளியேற்றும் முன்னர், தாலிபான்கள், இனி எந்தவொரு தீவிரவாத அமைப்புக்கும் நாட்டில் அடைக்கலம் தரமாட்டோம் என அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ததாகத் தகவல்கள் வெளியானது.
ஆனால் தற்போது ஆப்கானில் நடக்கும் நிகழ்வுகள், 20 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத தாலிபான்கள் தற்போது அவர்களின் உண்மையான முகத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளார்கள் என்பதை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் உலக அளவில் பயங்கரமான தீவிரவாதியும், ஆப்கானிஸ்தானின் முக்கிய அல்-காய்தா தலைவருமான டாக்டர் அமீன்-உல்-ஹக், அவர் தனது சொந்த மாகாணமான நாங்கர்ஹார் மாகாணத்திற்குத் திரும்பியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அமீன்-உல்-ஹக், டோரா போராவில் ஒசாமா பின்லேடனின் பாதுகாப்புப் பொறுப்பாளரான இருந்தவர். டாக்டர் அமீன், 1980களில் மக்தபா அகித்மத்தில் பணிபுரிந்தபோது அப்துல்லா அஸ்ஸாமுடன் ஒசாமா பின்லேடனுடன் நெருக்கமானார். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், அமீன்-உல்-ஹக் சோதனை சாவடி ஒன்றைக் கடந்து வெள்ளை நிற காரில் வருகிறார்.
அங்கிருக்கும் ஆயுதமேந்திய தாலிபான்கள் கார் செல்ல வழி விடும் வகையில் மக்களை ஓரமாக அனுப்புகின்றனர். இதனையடுத்து, அமீன் கார் அருகே கூட்டமாகச் சென்ற சிலர் அவரின் கையை பிடித்து வரவேற்கின்றனர். இதன் மூலம் தாலிபான்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் முகத்தை அமெரிக்காவிற்குக் காட்ட ஆரம்பித்துள்ளார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்