'2021 முடிவில் மொத்த மக்களில் பாதி பேருக்கு தான் கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்குமா?'... UK-வில் வெளியான 'வயிற்றில் புளியைக் கரைக்கும்' அறிக்கை!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசியை பிரிட்டன் முழுவதும் உள்ள மக்களுக்கு போடுவதற்காக 46 ஆயிரம் புதிய ஊழியர்கள் தேவைப்படுவார்கள். அதுமட்டுமின்றி அதற்க்கான செலவு 12 மில்லியன் டாலர் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதே சமயம், பிரிட்டனில் உள்ள பாதிக்கு பாதி மக்கள் கூட, 2021 ஆம் ஆண்டின் முடிவில் கொரோனா தடுப்பூசியை பெற்றிருக்க மாட்டார்கள் என்று அதனுடன் சேர்ந்து ஒரு அறிக்கை தெளிவுப் படுத்தியுள்ளது. போதுமான அளவு கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைத்தாலும், 25 மில்லியன் மக்கள் மட்டுமே அவற்றை பெறுவார்கள் என அரசாங்க செலவினங்களை கண்காணிக்கும் தேசிய தணிக்கை அலுவலகம் (National Audit Office) எண்ணுகிறது.
அத்துடன் முன்னுரிமை குழுக்களுக்களான பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள், அடிப்படை சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் போன்ற குழுக்களுக்கு இது போதுமானது. இந்த காரணங்களால் அந்நாட்டின் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு 2022 வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையிருக்கும் என்று தெரிகிறது.
மேலும் 11.7 பில்லியன் டாலர் செலவில், கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வது மற்றும் வாங்குவது போன்ற விஷயங்களில் ஏதேனும் தவறு நடந்துவிட்டால் கூட, வரி செலுத்துவோர் இதற்கான செலவுகளை செலுத்துவதற்கான மொத்த பொறுப்புகளையும் ஏற்கக் கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கை செய்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இங்கிலாந்து தேசிய சுகாதார பணியகம், அதிகமான பிரிட்டன் மக்கள் கொரோனா தடுப்பூசியைப் பெறுவார்கள் என்றும், 25 மில்லியன் மக்கள் தொகை என்பது உச்சவரம்பு இல்லை என்றும் வலியுறுத்தினர்.
மற்ற செய்திகள்
அரையாண்டு தேர்வு நடக்குமா..? குழப்பத்தில் இருந்த மாணவர்கள்.. அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்..!
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. தற்போது எத்தனை பேர் சிகிக்சை பெறுகிறார்கள்?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'இடியாய் இறங்கிய செய்தி'... 'கொரோனாவுக்கு பலியான உலகின் முதல் பிரதமர்'... அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!
- “முன்பதிவு அவசியம்!”.. எப்படி பதிவு செய்வது? யாருக்கெல்லாம் முன்னுரிமை தரப்படும்? - மத்திய அரசு பிறப்பித்த ‘அதிரடி’ உத்தரவு!
- ‘சந்தோஷம் கொஞ்சநாள் கூட நீடிக்கல’... ‘உருமாற்றம் அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘சிக்கி தவிக்கும் நாடு’...!!!
- 'முதல்ல அவங்களுக்கு தான் தடுப்பூசி போடணும்...' அதுக்கு முன்ன கண்டிப்பா 'இந்த விஷயங்கள்'லாம் பண்ணியே ஆகணும்...! - மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்...!
- 'ஒரு கருப்பு ஆடு இருக்கும்னு பாத்தா... ஆட்டு மந்தையே இருக்கா?'.. பிரிட்டன் முதலான நாடுகளில் 'அனைத்து நிறுவனங்களிலும்' இவங்க ஊடுருவி இருக்காங்க... 'கசிந்த கோப்புகள்'!
- ‘கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி’... ‘தடுப்பூசி போடும் பணியை துவங்கிய நாடு’... ‘இவங்களுக்கு தான் பர்ஸ்ட்’... ‘வாழ்த்து சொல்லி அதிபர் ட்வீட்...!!!
- கொரோனாவில் இருந்து மீண்டவர்களை தாக்கும் அரியவகை ‘பூஞ்சை’.. பார்வை இழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- 'தமிழகத்தின் இன்றைய (14-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- கொரோனாவோட மோசமான காலம் எப்போ வரப்போகுது தெரியுமா...? '2015-ல நான் எச்சரித்ததை விட கொரோனா ஆபத்தானது...' - பில்கேட்ஸ் கருத்து...!