'200 நாடுகளில் கொரோனா பாதிப்பு'... 'இந்த 7 நாடுகளில் மட்டும் பாதிப்பில்லை...' "எப்படி சாத்தியமானது?..."
முகப்பு > செய்திகள் > உலகம்உலகத்தில் சுமார் 200 நாடுகளில் கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 நாடுகள் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தென்பட்ட கொரோனா வைரஸ் மூன்றே மாதங்களில் ஏறக்குறைய உலகத்தின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது. சுமார் 200 நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. சுமார் 47 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
ஆகவே உலக சுகாதார நிறுவனம் இதை பெருந்தொற்று என்று அறிவித்துள்ளது. உலகத்தின் வளர்ந்த நாடுகளையும் திணறடித்து வரும் கொரோனா வைரஸ் 7 நாடுகளில் மட்டும் நுழையவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் தெற்கு சூடான், மலாவி, கொமோரோஸ் மற்றும் சாவ்டோம் ஆகிய நாடுகளில் இதுவரை ஒருவருக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இதேபோல், ஆசியாவின் துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஏமன் நாடுகளிலும் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “சென்னையின் பிரபல மாலில் பணிபுரிந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா!.. இந்த தேதியில அங்க யாராச்சும் போனீங்களா?”.. சென்னை மாநகர பெருநகராட்சி!
- கொரோனாவில் இருந்து 'தப்பித்த' 93 வயது முதியவர்... ஆஸ்பத்திரில கூட இந்த 'சாப்பாடு' தான் கேட்டாரு... 'ரகசியத்தை' உடைத்த பேரன்!
- "இந்த 5 பேருக்கு எப்படி கொரோனா வந்தது..." "அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்..." 'கண்டறிய' முடியாமல் 'திணறும்' 'சுகாதாரத்துறை...'
- எய்ம்ஸ் மருத்துவருக்கு கொரோனா உறுதி!... 'கான்டாக்ட் ட்ரேசிங்'கை தீவிரப்படுத்திய நிர்வாகம்!... டெல்லியில் பரபரப்பு!
- ‘இருமடங்கான கொரோனா வைரஸ் பாதிப்பு’... ‘இன்னும் சில நாட்களில்’... ‘கொரோனா வைரஸ் குறித்து’... ‘உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை’!
- 'காரணமின்றி' வெளியே வந்தால் '5 ஆண்டுகள்' சிறை... '76 லட்சம்' ரூபாய் 'அபராதம்'... 'தகவல்' தெரிவிக்கவில்லை என்றால் '3 ஆண்டுகள்' சிறை... 'எந்த நாட்டில் தெரியுமா?...'
- “மேலும் 75 பேருக்கு கொரோனா!.. ஆக மொத்தம் 309.. 2வது இடத்தில் தமிழகம்" - சுகாதாரத்துறை செயலர்!
- 'பூனை, நாய் கறி விற்கத் தடை...' 'லேட்டாக' விழித்துக் கொண்ட 'சீன நகரம்...' 'கொரோனா' கற்றுக் கொடுத்த 'பாடம்'...
- ‘கொரோனா’ இருக்குன்னு வேணும்னே இத பண்ணீங்கனா 1 வருஷம் சிறை தண்டனை.. இங்கிலாந்து போலீசார் அதிரடி..!
- ‘வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடந்த ஆலோசனை’.. மாநில முதல்வர்களுக்கு பிரதமர் சொன்னது என்ன..?