'வாழ்க்கை ஒரு வட்டம்'... 'அதிபர் தேர்தலில் இது மட்டும் நடந்துச்சு'... டிரம்ப்க்கு காத்திருக்கும் சோதனை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் தோற்கும் பட்சத்தில் மோசமான பட்டியல் ஒன்றில் இணையவிருக்கிறார்.

உலகமே அடுத்த அமெரிக்க அதிபராக யார் வரப் போகிறார் என்பதை ஆவலாக உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் என்பது உலகின் சக்திவாய்ந்த பதவி என்பது மட்டுமல்லாது, ஒவ்வொரு நாடுகளும் தங்களின் வெளியுறவுக் கொள்கையினை வகுக்கும் போது அமெரிக்க அதிபர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதை உன்னிப்பாகக் கவனிக்கும். அதே வேளையில் ஒரு நாட்டிற்கும் மற்ற நாட்டிற்கும் நடக்கும் பிரச்சனைகளில் அமெரிக்க அதிபர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னணியில் இருக்கிறார். பெரும்பான்மைக்குத் தேவையான இலக்கமான 270க்கு இன்னும் 6 வாக்குகளே தேவை என்ற நிலையில் ஜோ பைடன் வெற்றிக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறார். ஆனால் இன்னும் 3 மாகாணங்களில் டிரம்ப் முன்னணியில் இருந்தாலும் அவரால் வெற்றி பெற முடியுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 1789 முதல் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த அதிபர் தேர்தலில், 1856 முதல் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இந்த இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தான் வெள்ளை மாளிகையின் அதிபர் நாற்காலியை அலங்கரித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையில், கொரோனா காலத்தில் அவரது செயல்பாடு பெரும் அதிருப்தியை அளித்ததாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

இதனால் டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவ வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதிபர் பதவியிலிருந்து கொண்டு தோல்வியைத் தழுவிய முன்னாள் ஜனாதிபதிகளான, ஜான் ஆடம்ஸ், ஜான் குயின்சி ஆடம்ஸ், மார்ட்டின் வான் புரன், குரோவர் கிளீவ்லேண்ட், பெஞ்சமின் ஹாரிசன், வில்லியம் மெக்கின்ஸி, ஹர்பர்ட் ஹுவர், ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ் வரிசையில் டிரம்ப் இணையலாம்.

அதே நேரத்தில் 1993 தேர்தல் முதல் அதிபராக இருந்து தேர்தலைச் சந்தித்த அனைவரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் டிரம்ப் தோற்கும் பட்சத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த மோசமான சூழ்நிலை அவருக்கு உருவாகலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்