"அது என்னய்யா அது ஒரு வார்த்த ட்வீட்?".. ட்விட்டரில் படையெடுக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் ட்வீட்கள்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > உலகம்அடிக்கடி இணையத்தில் ஏதாவது புது புது விஷயங்கள் ட்ரெண்ட் ஆகிக் கொண்டே இருக்கும். ஏதாவது பாடலில் வரும் ஸ்டெப்கள் வைரலானதும், அதையே அனைவரும் பின்பற்றி ஆடி வீடியோவாக வெளியிடுவது என வைரலாகி கொண்டே இருக்கும்.
Also Read | ஆசிய கோப்பை 2022 : இந்திய அணிக்கு உருவான பெரிய சிக்கல்.. "இந்த மாதிரி ஒரு நேரத்துல தான் இப்டி நடக்கணுமா??"
உதாரணத்திற்கு Kiki சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், டல்கோனா காஃபி சேலஞ்ச் என பல விஷயங்கள் ஒரு காலத்தில் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தது.
ஒருவர் இதனை ஆரம்பித்து வைக்கும் நிலையில், அதனை பின்பற்றி பலரும் அப்படியே செய்வார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைத்தளங்களை திறந்தாலும் இப்படி ட்ரெண்டிங் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் இருப்பதை நாம் நிறைய காண முடியும்.
அந்த வகையில், ட்விட்டரில் தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் விஷயம், நெட்டிசன்கள் பலரது மத்தியில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு பிரபல ரெயில்வே நிறுவனம், ஆரம்பத்தில் ஒரு வார்த்தையில் ட்வீட் ஒன்று செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பின்பற்றி, பிரபல சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றும் ஒரு வார்த்தையில் ட்வீட் ஒன்றை பகிர, இணையவாசிகள் மத்தியில் இந்த ஒரு வார்த்தை ட்வீட் வைரலாக தொடங்கியது.
அது மட்டுமில்லாமல், பிரபலங்கள் பலரும் இந்த ஒரு வார்த்தை ட்வீட்டை பயன்படுத்தி சில பதிவுகளை பகிர்ந்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயகம் (Democracy) என ட்வீட் செய்திருந்தார். அதே போல, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'கிரிக்கெட்' என்றும், நாசா நிறுவனம் 'Universe' என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'திராவிடம்' என ட்வீட் செய்துள்ளார். இப்படி பிரபலங்கள் தொடங்கி, ட்விட்டர்வாசிகள் வரை பலரும் ஒரு வார்த்தையில் தங்கள் மனதில் படும் விஷயத்தை ட்வீட் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "சில நேரங்கள்ல லேட்டஸ்ட் டெக்னாலஜி -லாம் இப்படித்தான் இருக்கும்".. ஆனந்த் மஹிந்திரா போட்ட பதிவு.. வைரலாகும் ட்வீட்..!
- Neeya Naana: "நான் மதுர பொண்ணு.. கறி தோசை, புரோட்டா, சிக்கன் புடிக்கும்..".. அவரு Love டைம்ல Non Veg, திருமணத்துக்கு பின் Veg ஆகிட்டாரு.. கணவர் பற்றி இளம் பெண்ணின் வைரல் பேச்சு.!
- கீரைகளை சுத்தம் செய்ய வாஷிங் மெஷினா..? இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.? இணையத்தை தெறிக்கவிட்ட பெண்மணி.!
- குட்டிப் பன்றியை துரத்திய சிங்கம்.. பன்றி திரும்பி பார்த்ததும் மனம் மாறி சிங்கம் என்ன செஞ்சுது தெரியுமா..?.. உலகளவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு.!
- "பாவம்யா.. கல்யாணம் முடிஞ்சா... 3 நாளைக்கு இத பண்ணக் கூடாதா??.." வியப்பில் ஆழ்த்தும் வினோத பழக்கம்.. Trending
- "24 மணிநேரமும் அதுதான் மண்டைல ஓடிட்டே இருக்கு"..கிண்டல் செய்த நெட்டிசன்களுக்கு எலான் மஸ்க் கொடுத்த 'தெறி' பதில்..!
- மொத்த வாழ்க்கையும் இவ்வளவுதாங்க..ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச போட்டோ.. ரொம்ப சிம்பிளா சொல்லிட்டாரே..!
- "10,000 ரூபாய்க்கு காரா?.. நாங்க ஏற்கனவே பண்ணிட்டோமே.." நெட்டிசன் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திராவின் வைரல் பதில்
- "நரகத்துக்கு தான் போகணும்னாலும் எனக்கு ஓகே".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்.. பத்திகிட்ட டிவிட்டர்..!
- இது நம்ம லிஸ்டுலேயே இல்லையே.. மஸ்க் மார்க் வச்ச அடுத்த கம்பெனி.. பரபரப்பை கிளப்பிய ட்வீட்..