7 அதிசயங்களில் ஒன்றான.. மச்சு பிச்சு அருகே பற்றி எரியும் தீ.. அதிர்ச்சியை ஏற்படுத்திய காரணம்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பெரு நாட்டின் கஸ்கோ நகருக்கு அருகில் இருக்கிறது மச்சுபிச்சு நகரம்.

7 அதிசயங்களில் ஒன்றான.. மச்சு பிச்சு அருகே பற்றி எரியும் தீ.. அதிர்ச்சியை ஏற்படுத்திய காரணம்..
Advertising
>
Advertising

உலக அதிசயங்கள் பல இருக்க, அவற்றில் ஒன்றாக கருதப்படும் மச்சு பிச்சு நகரம், ஒரு புராதான வரலாற்றுச் சின்னமாகவும் கருதப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற இன்கா என்னும் பேரரசின் சின்னமாகவும் கருதப்படும் மச்சு பிச்சு நகரம், தற்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

தீ பற்றி எரியும் மச்சு பிச்சு பகுதி

பூமியின் சமநிலை என்றால் அது இயற்கை தான். இயற்கையின் இதயமே காடு தான். அந்த காடு, வெளிநாடுகளில் அடிக்கடி பற்றி இருப்பதை காணப்படுகிறது. ஒரு இடத்தில் பற்றி கொண்டால், காடு முழுவதும் பற்றி எரியக் கூடிய சம்பவங்கள், அடிக்கடி வெளிநாடுகளில் நிகழ்வதை தொடர்ச்சியாக இணையதளங்களில் பார்த்துக் கொண்டு வருகிறோம். அந்த வகையில், பெரு நாட்டில் மச்சு பிச்சு என்னும் வரலாற்று சிறப்புமிக்க இந்த இடம் அருகே தீ பற்றி எரிந்து வருகிறது.

தீவிரமாக ஈடுபடும் தீயணைப்பு வீரர்கள்

இந்த நகரம் அமைந்துள்ள மலைத் தொடரில் விவசாயிகள், பயிர்களை விதைப்பதற்கு முன் புல்லை எரித்ததன் காரணமாக, அங்கு  காட்டுத் தீ வேகமாக பரவத் துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக இந்த காட்டுத் தீ பற்றி வரும் நிலையில், தற்போது புராதனச் சின்னமான மச்சுவையும் இந்த தீ நெருங்க ஆரம்பித்துள்ளது.

மேலும், இந்த அபாயத்தை பரவ விடாமல் தடுப்பதற்காக, பெரு நாட்டின் தீயணைப்பு வீரர்கள், பல்வேறு குழுக்களாக பிரிந்து, முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

MACHU PICCHU, SEVEN WONDERS

மற்ற செய்திகள்