"ரொம்ப Rare பீஸு'ங்க இது.. 2 மில்லியன்'ல ஒண்ணு தான் இப்டி இருக்குமாம்.." நெட்டிசன்களை மிரள வைத்த ஃபோட்டோ

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மிகவும் ஆழமாக விரிந்து கிடக்கும் நீல கடலானது, ஏராளாமான அரிய வகை கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டு திகழ்ந்து வருகிறது.

Advertising
>
Advertising

பரந்து விரிந்து கிடக்கும் கடல் நீருக்குள் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதில், பல உயிரினங்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்து கொண்டிருந்தாலும், இன்னும் பல அரிய நிறுவனங்கள் குறித்து நாம் பெரிதாக தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

சமீபத்தில் கூட Transparent வகை மீனான "Blotched Snail fish", அலாஸ்கா பகுதியில் கிடைத்திருந்தது. கையில் வைத்தால் கண்ணாடி போல இருக்கும் இந்த மீனானது, மிகவும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களில் ஒன்றாகும்.

வியந்து போன நெட்டிசன்கள்

அந்த வகையில், தற்போது மிக மிக அரிய வகை கடல் உயிரினம் ஒன்று, போர்ட்லேண்ட் பகுதியை சேர்ந்த ஒருவரது வலையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நீல நிற Lobster ஒன்று போர்ட்லேண்ட் பகுதியில் சிக்கியுள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரையும் இந்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு காரணம், பொதுவாக Lobster என்றாலே, சேறு படிந்த பழுப்பு நிறத்தில் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.

சிக்கிய Blue lobster

ஆனால், தற்போது சிக்கியுள்ள Lobster, நீல நிறத்தில் உள்ளது. மேலும், 2 மில்லியன் Lobster-களில், அரிதாக ஒரு நீல நிற Lobster-ஐ காண முடியும். இப்படிப்பட்ட அரிய வகை Lobster என்பதால் தான், இந்த விஷயம் பலரையும் ஆச்சரியப்பட செய்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த நபர், தன்னுடைய கேப்ஷனில், "இந்த நீல Lobster Portland கடற்கரையில் பிடிபட்டது. மேலும், தொடர்ந்து வளர வேண்டும் என்பதற்காக மீண்டும் நீரிலேயே விடப்பட்டது. இரண்டு மில்லியன்களில் ஒரு Lobster தான் நீல நிறத்தில் இருக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.

அவர் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே இந்த புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் வியந்து போய் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மரபணு குறைபாட்டின் காரணமாக தான், Lobster-கள் நீல நிறத்தில் மாறுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

BLUE LOBSTER

மற்ற செய்திகள்