இந்த ‘அறிகுறி’ எல்லாம் இருந்தா சாதாரணமாக எடுத்துக்காதீங்க.. ஓமிக்ரோன் குறித்த ஆய்வில் வெளியான ‘புதிய’ தகவல்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஓமிக்ரோன் வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகள் குறித்த தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் வகை கொரானா வைரஸ் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இது டெல்டா வகை வைரஸை விட வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் ஓமிக்ரோன் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் ஓமிக்ரோன் தொற்று குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓமிக்ரோன் தொற்றுக்கு பல அறிகுறிகள் இருந்தாலும், ஒரு பொதுவான அறிகுறியாக ‘தொண்டைவலி’ இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஓமிக்ரோன் வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பெரும்பாலோனோருக்கு ஆரம்பகட்டத்தில் தொண்டை வலிதான் அறிகுறியாக இருந்துள்ளது. இதில் தென் ஆப்பிரிக்காவில் தொண்டை வலியுடன் சேர்த்து மூக்கடைப்பும் பலருக்கு இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் பிரிட்டனில் ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தலைவலி, உடல் சோர்வு, குளிர் போன்ற அறிகுறிகள் இருந்ததாக தெரியவந்துள்ளது. ZOE Symptom Tracking  என்ற  ஓமிக்ரோன் அறிகுறி குறித்த ஆய்வு அறிக்கையில் மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல் சோர்வு, தும்மல், தொண்டை புண் அல்லது தொண்டை வலி ஆகியவையும் இதன் அறிகுறிகளாக உள்ளது கூறப்பட்டுள்ளது.

ஓமிக்ரோன் தொற்றின் அறிகுறிகள் குறித்த ஆய்வினை தலைமையேற்று நடத்தும் விஞ்ஞானியான பேராசிரியர் டிம் ஸ்பெண்டர் இதுகுறித்து கூறுகையில், ‘மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தும்மல் மற்றும் குளிர் ஆகியவை ஓமிக்ரோன் அறிகுறிகளாக இருக்கிறது. மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அது கொரோனா தொற்றாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்