'மெழுகுவர்த்தி ஒரு பக்கம் மட்டும் உருகி வழிஞ்சா மரணம் தான்!' - ‘விநோத நம்பிக்கையும், வித்யாசமான உணவும்’! விபரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்சில் மெழுகுவர்த்தி மற்றும் தோசை போன்ற ஒரு உணவு பொருளை வைத்து Candlemas என்கிற பண்டிகை விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த பண்டிகை தொடர்பாக சில நூதன நம்பிக்கைகளும் நிலவுவதாக கருத்துக்கள் எழுந்துள்ளன. ரோமுக்கு வரும் ஏழை புனிதப் பயணிகளுக்கு உதவுவதற்காக 5-ஆம் நூற்றாண்டு வாக்கில் இப்படி மெழுகுவர்த்தி ஏற்றி Candlemas பண்டிகை கொண்டாடப்பட தொடங்கப்பட்டதாக தெரிகிறது. தோசை போன்று காணப்படும் Crepes என்கிற உணவை அன்னதானமாக வழங்கும் வழக்கத்தை Pope Gelasius எனும் போப்பாண்டவர் கொண்டு வந்தார்.

இத்துடன் தேவாலயத்தில் இருந்து மெழுகுவர்த்திகளை மக்கள் எடுத்துக்கொண்டு நடந்தே வீட்டுக்கு கொண்டு வருவார்கள். ஒவ்வொருவர் கொண்டுவரும் அந்த மெழுகுவர்த்தியும் வீடு வந்து சேரும் வரை அணையாமல் இருக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஒருவேளை அந்த மெழுகுவர்த்தி அணையாமல் இருந்து விட்டால் அவர் அந்த ஆண்டு இறக்க மாட்டார் என்பது மக்களுடைய நம்பிக்கை.

இன்னும் சில பகுதிகளில் சற்று வித்தியாசமான இன்னும் ஒரு நம்பிக்கையும் நிலவுகின்றது. அதாவது மெழுகுவர்த்தியை கொண்டு வரும்போது மெழுகுவர்த்தியில் இருந்து வழியும் மெழுகு ஒரு பக்கமாக மட்டுமே வழிந்துவிட்டால் அந்தாண்டு அந்த மெழுகுவர்த்தியை சுமந்து வருபவரின் அன்புக்குரியவர் ஒருவர் இறந்து விடுவார் என்றும் மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

இந்த பண்டிகையின்போது தோசை போன்று காணப்படும் மேற்கூறிய Crepes என்கிற அந்த உணவு அதிகம் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு எப்படி தயாரிக்கப்பட வேண்டும் என்பதிலும் கூட மக்கள் பல நம்பிக்கைகள் கொண்டுள்ளனர்.

ALSO READ: பிரியாணி 20 ரூபாய் .. அதுவும் இல்லையா?.. 'பசிக்குதா? எடுத்துக்குங்க!'.. ‘அந்த மனசுதான் சார் கடவுள்!’ - ‘நெகிழ வைக்கும்’ இளம்பெண்ணின் ‘வைரல்’ செயல்!

இந்த மெழுகுவத்தி பண்டிகையின்போது மழை வந்தால் தொடர்ந்து அடுத்த 40 நாட்களுக்கு மழை பெய்து கொண்டே தான் இருக்கும் என்கிற ஐதீகமும் இருக்கிறது. இந்த பண்டிகை தான் பிரான்சில் நேற்றைய தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்