அஜாக்கிரதை வேண்டாம்..!- அதி வேகமாகப் பரவும் ஒமைக்ரான் வைரஸ்..! எச்சரிக்கும் WHO
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வகைகளில் இந்த ஒமைக்ரான் வைரஸ் அதி வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நாடுகள் பலவற்றிலும் இன்னும் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. மொத்த இதுவரையில் அதிகாரப்பூர்வமாக 77 நாடுகளில் இந்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் பல நாடுகளில் உறுதிபடுத்தாவிட்டாலும் நிச்சயம் ஒமைக்ரான் பரவி உள்ளதாக WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து டெட்ரோஸ் கூறுகையில், “ஒமைக்ரான் ஒரு மிதமான பாதிப்பைக் கொடுக்கும் வைரஸ் என நினைத்து பல நாடுகளும் அஜாக்கிரதையாக இருக்கின்றன. ஆனால், ஒமைக்ரான் அதிகப்படியாகப் பரவும் திறன் கொண்டது. மற்ற கொரோனா வகைகளை விட ஒமைக்ரானின் பாதிப்பு உடலில் எந்தளவுக்கு ஏற்படும் என்பது இன்னும் உறுதியாகக் கூற முடியாத நிலை தான் உள்ளது.
ஆனால், இந்த அஜாக்கிரதை மனநிலையைத் தொடர்ந்தால் நிச்சயம் இதனது பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். பல நாடுகளும் மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்துவிட்டதாக எண்ணி அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசியை விட மாஸ்க் அணிதல், சமுக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகிய செயல்கள் மட்டுமே இந்தப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழி.
கைகளைக் கழுவுதல், சுத்தமான மாஸ்க் அணிதல், பொது வெளியில் கூட்டங்களில் செல்லாமல் இருத்தால் ஆகிய அனைத்து பாதுகாப்பு விஷயங்களையும் மக்கள் கடைபிடித்தே ஆக வேண்டும்” எனக் கூறியுள்ளார். சில ஆராய்ச்சியாளர்கள் பிஃவைசர், ஆஸ்ட்ராஜெனேகா போன்ற தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் அளவு வீரியம் கொண்டதாக இல்லை என்றும் கூறுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எது நடக்க கூடாதுன்னு நெனச்சமோ 'அது' நடந்துடுச்சு...! 'ஓமிக்ரான் வைரஸின் முதல் பலி...'
- ஒரே நாளில் ‘10 டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்.. எப்படி நடந்தது..? மிரண்டுபோன சுகாதாரத்துறை அதிகாரிகள்..!
- 'அந்த' நாட்டுல இருந்து தான் வர்றீங்களா...? 'அப்போ உங்களுக்கு குவாரண்டைன் வேண்டாம்...' - ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாடு...!
- நாம பண்ற 'தப்பு' இது தான்...! - ஓமிக்ரான் வைரஸ் குறித்து WHO தலைமை மருத்துவர் பகிர்ந்த 'முக்கிய' தகவல்...!
- இந்தியாவில் கொரோனா 'மூன்றாவது அலை' எப்போது...? - 'அதிர்ச்சி' தகவலை வெளியிட்ட IIT விஞ்ஞானி...!
- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!
- ஓமிக்ரான் 'டெல்டா வைரஸ' விட ஆபத்தானதா...? - அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் கருத்து...!
- இந்தியால நேத்து 'ஒருநாள்' மட்டும் 'இத்தனை' பேருக்கு ஓமிக்ரான் வைரஸா...? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சகம்...!
- 'ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஓமிக்ரானைக் கண்டு அச்சப்படும் நிலையில்...' - WHO விஞ்ஞானி வெளியிட்ட முக்கிய தகவல்...!
- உலகமே 'ஓமிக்ரான' நினைச்சு 'ஃபீல்' பண்ணிட்டு இருந்தப்போ... 'மனசு குளிருற மாதிரி வந்துள்ள கிரேட் நியூஸ்...' - தென் ஆப்பிரிக்க மருத்துவர் சொன்ன தகவல்...!