அசுர வேகத்தில் பரவும் ஒமைக்ரான்… தடுப்பூசி போடாதவர்களுக்குப் பெரும் அபாயம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒமைக்ரான் வகை வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சர்வதேச அளவில் ஒமைக்ரான் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் மற்றொரு பரிமாணமாக ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தப் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இஸ்ரேல், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பரவி உள்ளது. இதற்கு முன்னர் வந்த டெல்டா வகை வைரஸை விட அதிக ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களை இந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்களுக்கும் இந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவே அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஒமைக்ராம் தொற்று அதி தீவிரமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி அங்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு அமல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கொரோனா வைரஸால் பிரிட்டன் பெரும் துயரத்தை சந்தித்து முடித்த வேளையில் ஒமைக்ரான் அடுத்த அபாயத்தைக் கொண்டு வந்துள்ளந்து அந்நாட்டு மக்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகப்படியாக உள்ளது. அமெரிக்க அதிபருக்கான மருத்துவ ஆலோசகர் அந்தோனி பவுசி கூறுகையில், “தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு என பண்டிகைகள் வருவதால் விடுமுறைகாலத்தில் தொற்று வேகமாகப் பரவக்கூடும் அபாயம் உள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

OMICRON, CORONA VIRUS, CORONA VACCINATION, கொரோனா வைரஸ், ஒமைக்ரான், கொரோனா தடுப்பூசி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்