‘சுனாமி வேகத்தில் பரவும்’.. டெல்டா-ஒமைக்ரான் இரட்டை அச்சுறுத்தல்.. எச்சரிக்கை செய்த உலக சுகாதார அமைப்பு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இரட்டை அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 8 லட்சத்து 27 ஆயிரமாக இருந்தது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) முக்கிய தகவல் தெரிவித்துள்ளார். அதில், ‘டெல்டா, ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இரட்டை அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. டெல்டா வகையை போலவே ஒமைக்ரான் வைரஸும் அதிவேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இவை கொரோனா பாதிப்பை சுனாமி போல் ஏற்படுத்தும்’ என அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

அதேபோல் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனர் டாக்டர் ரோசெல் பி. வாலென்ஸ்கி கூறுகையில், ‘கடந்த வாரத்தில் சுமார் 60% பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு நாளும் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 9000 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுகின்றனர்.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில், முழுமையான கொரோனா தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்புசியும் செலுத்திக்கொண்ட நபர்களுக்கு ஒமைக்ரானால் லேசான பாதிப்புதான் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது’ என டாக்டர் ரோசெல் பி. வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்