"4 நாள் போதும் நாங்க கேஸ்-ல ஜெய்ச்சிடுவோம்".. எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்த ட்விட்டர்..மஸ்க் போட்ட ரிப்ளை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எலான் மஸ்க் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இலங்கை அரசியலில் திருப்பம்.. ராணுவ ஜெட்டில் வெளிநாட்டுக்கு தப்பிய அதிபர் கோத்தபய.. பரபரப்பில் இலங்கை..!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.

அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

போலி கணக்குகள்

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் டீலை தற்காலிகமாக நிறுத்துவதாக மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். ட்விட்டர் தளத்தில் போலி கணக்குகள் மற்றும் ஸ்பாம்கள் அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

அதைத் தொடர்ந்து போலி கணக்குகளின் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முழுவதுமாக கைவிட இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர முடிவு

இந்நிலையில் கடந்த வாரம், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை நிரந்தரமாக கைவிடுவதாக அறிவித்திருக்கிறார் மஸ்க். இது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், திட்டமிட்டபடி ட்விட்டர் நிறுவனத்தை வாங்காவிடில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மஸ்க் செலுத்த நேரிடும் என ட்விட்டர் எச்சரிந்திருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து, எலான் மஸ்க் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக மஸ்க்கிற்கு வழங்கப்பட கெடு அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகவே, அதற்கு உள்ளாகவே இந்த வழக்கு விசாரணையை முடிக்க ட்விட்டர் நிறுவனம் விருப்பப்படுவதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை 4 நாள்களில் முடிவடையும் எனவும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் எனவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மஸ்க் ரிப்ளை

ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"ஓ என்ன முரண்"என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Also Read | "யாரும் போன் எடுக்கல, நீங்க தான் 'Help' பண்ணனும்.." பதறிய பெண்.. காரணம் கேட்டு கடுப்பான 'போலீஸ்'

ELON MUSK, TWITTER, ELON MUSK TWEET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்