வாரத்துல 4 நாள் வேலை, 3 நாள் லீவு.. முழு சம்பளம்... ஆனால் ஒரு கண்டிசன்... ம்ம்க்கும்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் திட்டத்தை இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

Advertising
>
Advertising

இந்தியாவில் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் வேலை செய்கிறார்கள். கொலம்பியாவில் 47.6 மணி நேரமும், சீனாவில் 46 மணி நேரமும், துருக்கியில் 45.6 மணி நேரமும், மெக்சிகோவில் 44.7 மணி நேரமும், கோஸ்டாரிகாவில் 43.5 மணி நேரமும் வார வேலை நேரங்களாக இருக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலை செய்யும் தினத்தை 4½ நாட்களாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதேபோல இந்தியாவிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் வேலை நாட்களை குறைக்க ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு வந்தது. தற்போது வேலை நாட்களை 4 நாட்களாக குறைக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.

ஆனால் வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை என்றால் எப்படி இருக்கும். 7 நாட்களில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை. கேட்கவே ஆசையாக இருப்பது உண்மைதான். இதுபோன்ற ஒரு முயற்சியை இங்கிலாந்து தற்போது கையில் எடுத்துள்ளது. இந்த சோதனை முயற்சி இன்று முதல் தொடங்கியுள்ளது.

நாகை விசிக பிரமுகர் இறப்பில் அவிழ்ந்த மர்மம்.. மாமியார் கைது.. மனைவியும் கைது.‌. நடந்தது என்ன?

வெளியான தகவலின்படி, தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கான 80% வேலையை பார்ப்பார்கள். அவர்களுக்கான 100% சம்பளம் வழங்கப்படும். அதுபோல 100 உற்பத்தித் திறனையும் கொடுக்க வேண்டும். அதாவது கொடுக்கும் நேரத்தில் ஆர்வமாக வேலையை பார்த்து வழக்கமாக கொடுக்கும் உற்பத்தித் திறனை கொடுத்தால் போதும்.

இதனால் உற்பத்தித்திறன் மற்றும் பணியாளரின் நல்வாழ்வில் இது எது மாதிரியான வித்தியாசத்தை கொண்டு வரும் என என்பதை கண்டறியவே இந்த முறை தற்போது சோதனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. வாரத்துக்கு  4 நாட்கள் வேலை என்ற கணக்கில் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த முறை நடைமுறையில் இருக்கும். அது ஏற்படுத்தும் மாற்றங்களை ஆய்வாளர்கள் புள்ளிவிவரங்களாக குறிப்பெடுத்து இதற்கான முடிவு கண்டறியப்படும்.

RCB அணிக்கு அடுத்த கேப்டன் இவரா..? லிஸ்ட்லயே இல்லாத பெயரா இருக்கே..! கசிந்த தகவல்..!

 

இந்த சோதனை முறையை கடைப்பிடிக்க பல தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இந்த சோதனையில், தொழிலாளர்கள் ஆரோக்கியம், மன நிலை, நிறுவனத்தின் உற்பத்தி, செலவீனங்கள் என ஆகியவற்றை தெரிந்துகொள்ள உதவுகிறது. இதில் இருதரப்புக்குமே லாபம் என்றால் இதனை தொடர்ந்து கடைபிடிப்பதில் சிக்கல் இருக்காது என்றும் கூறப்படுகிறது.  தொழிலாளர்கள் மிக நேர்மையாகவும், உற்சாகத்துடன் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்துவார்கள் என நம்பப்படுகிறது.

OFFICES FOUR DAY, UK, PRIVATE OFFICE WORKERS, 4 நாட்கள் வேலை, ஐக்கிய அரபு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்