'ஹலோ.. போலீஸா? தனியா இருக்கேன்.. பய்ம்மா இருக்குது..' வைரலான சிறுவன் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

காவல்துறையின் அவசர எண்ணுக்கு அழைத்து, தனது நண்பனாக இருக்க முடியுமா எனக் கேட்ட சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளனர் காவல்துறையினர்.

தனி மனித சுதந்திரம் என்ற பார்வையில், தற்போது கூட்டுக் குடும்பம் தனிக் குடும்பமாகி பெற்றோர்கள் குழந்தைகளை தனிமையில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். இதனால் பெரியவர்கள் துணையின்றி நாள் முழுவதும் தனிமையில் வாழும் சிறுவர்கள் ஏராளம். அப்படி ஒரு சம்பவம்தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.

புளோரிடா மாகாணத்தின் டல்ஹாசி போலீஸின் அவசர எண் அழைப்புக்கு நேற்று ஒரு போன் கால் வந்துள்ளது. வழக்கமாக அவசர அழைப்புக்காக ஒலிக்கும் அந்த போன் கால், இந்த முறை சற்று வித்தியாச அனுபவத்தைத் தந்துள்ளது. போலீஸ் ஆபீஸர் ஜோ வொயிட் அந்த போன்காலை எடுத்துப் பேசும்போது, மறுமுனையில் 6 வயது சிறுவன் ஒருவன் பேசியுள்ளான்.

அந்த சிறுவன், 'நான் தனிமையாக இருக்கிறேன். எனக்கு நண்பனாக இருக்க முடியுமா' என்று கேட்டுள்ளான். பதட்டமும் பரபரப்பும் நிறைந்த போன் கால்களில் இந்த போன் கால் காவல்துறையினருக்கு வித்தியாசமாக இருந்தது. உடனடியாக ஆபீஸர் ஜோ வொயிட், விலங்கு பொம்மை ஒன்று வாங்கிக் கொண்டு, அந்த சிறுவனின் இல்லத்துக்கு போய் அவனுக்கு அதனை பரிசாக அளித்துள்ளார்.

மேலும், 'எப்போதும் உனக்கு நண்பனாக இருப்பேன்' எனக் கூறி சிறுவனை மகிழ்ச்சியாக்கியுள்ளார் ஆபிஸர் வொயிட். சிறுவனைத் தனது போலீஸ் வாகனத்தில் உட்காரவைத்துச் சுற்றிக்காட்டியதுடன், அந்தச் சிறுவனுடன் சில மணி நேரம் பொழுதையும் கழித்துள்ளார். அதேநேரத்தில், அவசர அழைப்புக்குறித்த விளக்கத்தையும் செல்லமாகச் சொல்லியும் தந்துள்ளார் போலீஸ் அதிகாரி. இந்தச் சம்பவங்களை டல்ஹாசி போலீஸ் தனது வலைதளப்பக்கத்தில் `எங்களுக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்திருக்கிறார்' எனப் பகிர, போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

LONELYBOY, FLORIDA, POLICE, US

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்