நதி முழுவதும் செத்து மிதக்கும் மீன்கள்.. காரணமானவர்களை கண்டுபிடிச்சு கொடுத்தா ரூ 1.5 கோடி சன்மானம்.. கைவிரித்த ஆய்வாளர்கள்.. குழப்பத்துல தவிக்கும் நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜெர்மனி - போலந்து எல்லையில் உள்ள ஓடர் நதி முழுவதும் ஏராளமான மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதக்கின்றன. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால் கோடிக்கணக்கில் சன்மானம் அளிக்கப்படும் என போலந்து அரசு தெரிவித்திருக்கிறது.
ஓடர் நதி
செக் குடியரசு நாட்டில் உருவாகி பால்டிக் கடலில் கலக்கிறது ஓடர் நதி. இது ஜெர்மனி மற்றும் போலந்து எல்லைகளின் வழியே பயணிக்கிறது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இந்த நதியில் மர்மமான முறையில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் இரு நாட்டை சேர்ந்த மக்களுமே அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என கண்டறிய ஆய்வாளர்கள் பணியில் இறங்கினர். ஆனால், இந்நேரம் வரையிலும் மீன்கள் இறப்புக்கான காரணம் மர்மமாகவே இருந்து வருகிறது.
ஆய்வு
இந்த நதியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், நீரில் உப்புத்தன்மை அதிகம் இருந்ததாகவும் ஆனால், மற்றபடி ரசாயனங்களோ நச்சு கிருமிகளோ நீரில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது நிலைமையை மேலும் சிக்கலாக மாற்றியுள்ளது. மீன்கள் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரியாமல் ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய இரண்டு நாடுகளுமே அச்சமடைந்திருக்கின்றன.
ஏனெனில், மீன்கள் இறப்பினால் சுற்றுச்குழலில் ஏற்படும் தாக்கத்தை கணிப்பது சிரமமாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். மேலும், இது பேரழிவு என்றும் இது ஏற்படுத்தும் தாக்கம் பல ஆண்டுகளுக்கு இருக்கும் எனவும் ஜெர்மனி சுற்றுப்புற சூழல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நதியில் இருந்து இறந்த மீன்களை வெளியேற்றும் பணியில் கடந்த சில நாட்களாக 2,000 போலீஸ் அதிகாரிகள், 300 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 200 ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சன்மானம்
கடந்த வாரம் ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நதி நீரில் பாதரசத்தின் செறிவு அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த கூற்றை போலந்து அரசு மறுத்திருக்கிறது. மேலும், இந்த கொடும் செயலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து கொடுத்தால் 180,000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.5 கோடி ரூபாய்) சன்மானமாக அளிக்கப்படும் என போலந்து அரசு அறிவித்திருக்கிறது.
Also Read | 800 கிடா.. 100 மூட்டை அரசி.. ஆண்களுக்கு மட்டும் நடைபெற்ற பிரம்மாண்ட விருந்து.. 200 வருஷமா இப்படித்தானாம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நீரில் அடித்து செல்லப்பட்ட 'பெண்'.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் 'முகம்'.. இரவு முழுவதும் நடந்த போராட்டம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்
- கை தவறி ஆற்றில் விழுந்த போன்.. 10 மாசத்துக்கு அப்பறம் கிடைச்சும் Work ஆன அதிசயம்..!
- ஆற்றில் மிதந்த BMW கார்.. அதிர்ந்த மக்கள்.. "போலீஸ் வந்து விசாரிச்சதுல.." கண்கலங்க வைக்கும் காரணம்
- மனித வரலாற்றிலேயே இந்த மீன கொஞ்ச பேர் தான் பாத்திருப்பாங்க.. கரை ஒதுங்கிய ராட்சச பீஸ்ட் மீன்.. தீயாய் பரவும் வீடியோ..!
- தமிழக மீனவருக்கு அடிச்ச ஜாக்பாட்.. வலையில் சிக்குன ராட்சத அதிர்ஷ்டம்!.. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
- ஆற்றில் தத்தளித்த 9 பேர்.. தனி ஒருவனாக போராடி அனைவரையும் காப்பாற்றிய நபர்.. "குல சாமிப்பா நீ" .. நெகிழும் கிராம மக்கள்..!
- ஆற்றின் கரை அருகே 'Wedding' போட்டோஷூட்??.. எதிர்பாராத நேரத்தில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்
- ஆசையா மீன் ஆர்டர் செஞ்ச கஸ்டமர்.. தட்டில் வந்த மீனை பார்த்ததும் அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!
- ஆற்றில் குளிக்க போன மனைவி வீடு திரும்பல.. நைட் முழுக்க தேடிய கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!
- VIDEO: திருவிழா முடிச்சிட்டு வீட்டுக்கு போகும்போது திடீரென கவிழ்ந்த படகு.. 2 பேர் மாயம்.. பதற வைத்த வீடியோ..!