6 மாசத்துக்கு பின்.. ஒரே ‘ஒரு’ நபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. ஒட்டுமொத்த நாட்டுக்கும் ‘லாக்டவுன்’ போட்ட பிரதமர்.. வைரஸுக்கே சவால் விடும் ‘குட்டி நாடு’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கையாண்டு அதனை கட்டுக்குள் கொண்டுவந்த சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. சுமார் 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகள் மூலம், வைரஸ் பரவலை வெகு விரைவாக கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், நியூசிலாந்தில் இதுவரை 26 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த 6 மாதங்களாக அங்கு புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நியூசிலாந்தின் வடக்கு‌ பகுதியில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் எந்தவித வெளிநாட்டு தொடர்பும் இல்லாத ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய‌ தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ஆக்லாந்து நகரிலும், பாதிக்கப்பட்ட நபர் அண்மையில் சென்று வந்த கோரமண்டல் நகரிலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.‌ மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்