ஊரடங்கால் 'உச்சத்தை' எட்டிய விற்பனை... கடைசில மொத்த 'ஸ்டாக்கும்'... தீர்ந்து போச்சாம் மக்களே!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஊரடங்கு உத்தரவால் சர்வதேச அளவில் காண்டம் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கொரோனாவால் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகள் தற்போது ஊரடங்கு உத்தரவில் உள்ளன. இதனால் மளிகை பொருட்கள், உணவுப்பொருட்கள் ஆகியவை விற்பனை சர்ரென்று எகிறத்தொடங்கி இருக்கிறது. இவற்றுடன் சேர்ந்து காண்டம் விற்பனையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து இருக்கிறதாம். காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் தற்போது தயாரிப்பை நிறுத்தி வைத்து இருப்பதால் சர்வதேச அளவில் காண்டம்க்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காண்டம் தயாரிப்பின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான காரெக்ஸ்(Karex) நிறுவனத்தின் (மலேசியா) தலைமை நிர்வாக அதிகாரி கோ மியாத் கியா கூறுகையில், ''அடுத்த சில நாட்களில் உலகளவில் காண்டம் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். இதைப்பற்றி நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது,'' என தெரிவித்து இருக்கிறார். உலகளவில் மாஸ்க்குக்கு இணையாக காண்டம், கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்