இது ‘அதே’ மாதிரில இருக்கு... ‘40 ஆண்டுகளுக்கு’ முன்பே கொரோனாவை ‘கணித்தவர்!’... அதிர்ச்சியூட்டும் ‘திகில்’ நாவல்...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவை மிரட்டும் கொரோனா வைரஸ் குறித்த தகவல் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியான நாவல் ஒன்றில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹானில் துவங்கி 27க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1800ஐ நெருங்கிவரும் நிலையில், எப்படியாவது கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன. இந்நிலையில், சீனாவை மிரட்டும் கொரோனா வைரஸைப் போலவே, ஒரு உயிர்கொல்லி வைரஸ் குறித்து சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான The Eyes of Darkness என்ற கற்பனை கலந்த திகில் நாவலில் கூறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நாவலில் கூறப்பட்டிருப்பது போலவே தான் தற்போது நிஜத்தில் நடந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்க எழுத்தாளரான டீன் கூன்ட்ஸ் (Dean Koontz) என்பவர் எழுதியுள்ள அந்த நாவலில் சீன ராணுவ ஆய்வகத்தை பற்றிக் கூறப்பட்டுள்ளது. வுஹானில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ ஆய்வகம் ஒன்று போர்க்காலத்தில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த புதிய வைரஸ் ஒன்றைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவதாகவும், இறுதியாக கொடூர வைரஸ் ஒன்று உருவாக்கப்படுவதாகவும் அந்த நாவலில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உயிர்கொல்லி வைரசுக்கு வுஹான் 400 (Wuhan 400) என்றும் நாவலில் பெயரிடப்பட்டுள்ளது. கற்பனை நாவலில் வருவதை போலவே வுஹான் நகரில் தான் தற்போது கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது என்பதால் அதை எழுதிய டீன் கூன்ட்ஸ் தீர்க்கதரிசியாக பார்க்கப்படுகிறார். மேலும் அந்த நாவலில் கற்பனையாக கூறப்பட்ட பல தகவல்கள் நிஜத்துடன் ஒத்துப்போவது பெரும் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

CHINA, WUHAN, CORONAVIRUS, BOOK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்