'அப்ப சொந்த வீடு கூட இல்ல'.. 'இப்ப இவ்ளோ பெரிய தீவுக்கு ஓனர்!'.. இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சொந்தமாக வீடு கூட இல்லாத சூழலில் இருந்த இந்திய வம்சாவளி இளைஞர், தற்போது தனது திறமையால் தீவு ஒன்றிற்கு உரிமையாளராகி உள்ள சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். இவர் என்பிடி என்ற நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் பங்கேற்று, அதில் முதல் பரிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அவரை கௌரவிக்கும் வகையில், அவருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் பரிசாகக் கிடைத்ததோடு, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு, இன்னொரு பெரும் பரிசும் கிடைத்தது. ஆம், கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே உள்ள ஹால்பாயிண்ட் தீவினை பரிசுக்குழுவினர் லோப்பஸ்க்கு பரிசாக அளித்துள்ளனர்.

சுமார் 5 கால்பந்தாட்ட மைதானத்தின் பரப்பளவு கொண்ட இந்தத் தீவினை பரிசாக பெற்றது குறித்து பேசிய லோப்பஸ் சொந்தமாக வீடு கூட இல்லாத, தான் தற்போது ஒரு தீவுக்கு உரிமையாளராக ஆனதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், தனது பெற்றோருடன் அந்தத் தீவினில் வசிக்க விரும்பவுதாகவும் கூறியுள்ளார்.

PRIZE, ISLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்