அலாஸ்கா அருகே நார்வே சன் சொகுசு கப்பல் ஒன்று பனிப்பாறையில் மோதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
வட அமெரிக்காவின் மூலையில் உள்ளது அலாஸ்கா. கடும் குளிர் நிறைந்த பகுதியான இதில், கடல்நீர் ஆங்காங்கே உறைந்து நிற்கும். காவல்துறை அதிகாரிகள் கொடுக்கும் வழிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இந்த பகுதியில் கப்பல்களை இயக்க முடியும். அப்படி, கடந்த சனிக்கிழமை அன்று இப்பகுதியில் பயணித்த நார்வே சன் என்னும் சொகுசு கப்பல் ஒன்று பனிப் பாறையில் மோதியிருக்கிறது. இதனால் கப்பலின் கீழ் பகுதி சேதமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீண்டும் துறைமுகத்திற்கு
அமெரிக்க கடலோர காவல்படையின் (USCG) அறிக்கையின்படி, கடந்த சனிக்கிழமை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பழுதடைந்த பாகங்களை சரிசெய்ய சியாட்டில் நகரத்திற்கு இந்த கப்பல் செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலின் வலது பக்கத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் சியாட்டிலில் உள்ள துறைமுகத்திற்கு இந்த கப்பல் பயணித்ததுவருவதாகவும் கடலோரக் காவல்படைத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த விபத்தினால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய இந்த கப்பலின் செய்தித் தொடர்பாளர்,"அலாஸ்காவில் உள்ள ஹப்பார்ட் பனிப்பாறையை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தபோது பனிப்பாறையில் (growler) கப்பல் மோதியது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைரல் வீடியோ
தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம், கடல் மட்டத்திலிருந்து 16 அடிக்கு மேல் உயரம் மற்றும் 98 முதல் 164 அடி தடிமனாக இருக்கும் பனிப்பாறைகளை iceberg என்றும், அதற்கும் குறைவான அளவுடைய பனிப்பாறைகளை "growlers" அல்லது "bergy bits" என்றும் வகைப்படுத்தியுள்ளது. ஆகவே, நார்வே சன் கப்பலில் மோதியது ஒரு சிறிய ரக growlers தான் என்றும் இதனால் கப்பலுக்கு ஆபத்தான அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கப்பல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், பனிப்பாறையில் நார்வே சன் கப்பல் மோதிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீர்னு வானத்துல தோன்றிய வித்தியாசமான மேகம்.. அதிர்ந்துபோன மக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
- ‘சுனாமி எச்சரிக்கை’!.. ‘மக்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்துக்கு போங்க’.. அமெரிக்காவை அதிரவைத்த நிலநடுக்கம்..!
- ‘நீச்சல் போட்டிக்குபோன மாணவர்கள்’ ‘திடீரென ஆற்றுக்குள் இறங்கிய விமானம்’.. பரபரப்பு சம்பவம்..!
- சுற்றுலா விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பலி, ஒருவர் மாயம்!