'கலக்கிட்டீங்க தல' சீன அதிபரை புகழ்ந்து தள்ளிய 'வடகொரியா' அதிபர்... என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த மாதம் முழுவதும் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்று உலக நாடுகளை பட்டிமன்றம் நடத்த வைத்த வடகொரியா அதிபர் அண்மையில் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து வெளியில் வந்தார். ஆனால் அது கிம் கிடையாது அவரின் போலி என தற்போது புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் கிம் ஜான் உங் சீன அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. அதில், ''கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிம் உடல் நலம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விசாரித்தார்,'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்க்கு நாடு முழுவதும் 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உயிரிழப்பு 5 ஆயிரமாக உள்ளது. அதே நேரம் சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் புதிதாக யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்