ராட்சத மீன்களுக்கு இரையான ராணுவ தளபதி..? கொடூர தண்டனைகளின் தலைவரா கிம்? நடுங்க வைக்கும் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வரலாற்றில் மறக்க முடியாத பல மரண தண்டனைகளை வழங்கியவர் மங்கோலிய படை மன்னன் செங்கிஸ்கான் என்று சொல்லப்படுவது உண்டு. அதன் பிறகு வடகொரிய அதிபர் கிம் ஜாங் என்று சொல்லும் அளவுக்கு சர்ச்சைக்குரிய தண்டனைகளை அவர் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று பல உலக நாடுகளிடமிருந்தும் வந்த அழுத்தங்களையும் மீறி, வெற்றிகரமான அணு ஆயுத சோதனைகளைச் செய்து வந்தார் கிம் ஜாங். ஆனால் இந்த தொடர் சோதனைகளால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த பிறகுதான், அந்த சோதனைகளை நிறுத்திக்கொள்வதாகவும், இனியும் இவற்றைத் தொடரப்போவதில்லை என்றும் கிம் அறிவித்தார்.

அதன் பிறகு, கடந்த பிப்ரவரியில் வியட்நாம் தலைநகர் ஹானோவில் நடந்த உச்சிமாநாட்டில் மீண்டும் ட்ரம்பும் கிம்மும் சந்தித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியது. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததாகவும், அதனால் கோபமான கிம் அந்த சந்திப்பை நிகழ்த்திய சிறப்புத் தூதரான கிம் ஹியோக் சோல் என்பவரைக் கொலை செய்ததாகவும், இந்தத் தகவல் கசிந்ததால் கிம் தற்போது தனது ராணுவத் தளபதியையும் கொன்றுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, தனக்கு துரோகம் செய்பவர்களையும், தன் கட்டளைகளை மீறுபவர்களையும், தன் மாளிகையில் உள்ள பிரமாண்ட தண்ணீர் தொட்டியில் உள்ள, பிரேஸிலில் இருந்து வரவழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிரானா மீன்களுக்கு இரையாக்கி விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடித்தே தின்றுவிடும் இயல்புடைய இந்த மீன்கள் இதுவரை 16 அதிகாரிகள், சில கிளர்ச்சியாளர்கள், புலிகள் உள்ளவற்றை தின்று தீர்த்துவிட்டதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

KIMJONGUN, NORTHKOREA, PUNISHMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்