'அது ஒரு அழகான லெட்டர்'.. ட்ரம்ப்புக்கு கிம் ஜாங் எழுதிய லெட்டர்.. வைரல் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரிய அதிபர் ‘கிம் ஜாங் உன் தனக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் வியட்நாமின் ஹெனோய் என்கிற இடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சந்தித்துக்கொண்ட சந்திப்பின் நோக்கம் அணு ஆயுத ஒழிப்பு மற்றும் இருநாடுகளுக்கிடையேயான அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைதான் என்றாலும், அன்றைய தினம் அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதும், அந்த தேதியில் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னரும் அதற்கு முன்னரும் அமெரிக்காவின் பேச்சையும் மீறி அணு ஆயுத சோதனையில் வட கொரிய அதிபர் கிம் ஈடுபட்டதால், வடகொரியாவின் மீது அமெரிக்க அரசு பொருளாதார தடை விதித்ததோடு, ட்ரம்ப்பும் கிம்மும் சந்தித்துப் பேசிக்கொண்ட பிறகும் கூட அந்த தடையை இன்னும் நீட்டித்தே வைத்துள்ளது அமெரிக்கா.

இந்த சூழலில், தனக்கு அதிபர் கிம்மிடம் இருந்து அழகாகவும், மென்மையாகவும், இதமாகவும் ஒரு கடிதம் வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த ட்ரம்ப், அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பது பற்றி எதுவும் கூறாத ட்ரம்ப், வெளிப்படையாகவே அதுபற்றி வெளியில் கூறமுடியாது என்றும்  தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் மாத இறுதியில், கொரிய தீபகற்ப அணுகுமுறை உள்ளிட்டவை பற்றி விவாதிக்க, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிபர்களை ட்ரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

KIMJONGUN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்