வட கொரியாவை அடுத்து 'ஆளப்போவது'... கிம்மின் 'காதல்' மனைவியா?... இல்லை சொந்த தங்கையா?
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அடுத்ததாக அங்கு ஆட்சியை நடத்தப்போவது யார்? என்ற விவாதங்கள் சர்வதேச அரங்கில் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன.
கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் திணறித்தவித்து கொண்டிருக்கும் இந்த நிலையிலும் அமெரிக்கா தொடர்ந்து வட கொரியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக கிம்முக்கு தற்போது இதயத்தில் அறுவைசிகிச்சை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த 2 வாரங்களாக அவர் வெளியில் தலை காட்டாததால் கொரோனா களேபரங்களுக்கு மத்தியிலும் வட கொரியா மீது உலக நாடுகள் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கின்றன.
இதற்கிடையில் கிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அடுத்ததாக வட கொரியாவை ஆளப்போவது அவரது காதல் மனைவியா? அல்லது பாசத்துக்கு உரிய தங்கையா? என்ற விவாதங்கள் சர்வதேச அரங்கில் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. கிம்மின் மனைவி பெயர் ரி சோல் ஜு. பொது நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து பிடித்துப்போய் கிம் அவரை திருமணம் செய்து கொண்டாராம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன.
மறுபுறம் கிம்மின் சகோதரி பெயர் கிம் யோ ஜாங். இருவரும் ஒன்றாக சுவிட்சர்லாந்தில் படித்தவர்கள். தந்தை இறப்பிற்கு பின் அண்ணனுக்கு அவ்வப்போது ஆலோசனை சொல்லி அவரை வழிநடத்துவது இவர் தானாம். வட கொரியாவைப் பொறுத்தவரை ஆணாதிக்கம் பிடித்த நாடு. அங்கு வீட்டிலும் சரி பொது வெளியிலும் சரி பெண்களுக்கு சம உரிமை கிடையாது. இதன் காரணமாகவே ரி குறித்தோ மற்றும் தங்கை யோ குறித்தோ இதுவரை எந்த பெரிய தகவலும் வெளியுலகுக்குக் கசிந்ததில்லை.
இதனால் தற்போது ரி எங்கிருக்கிறார்? கிம்மின் உடல்நிலை எந்தளவில் உள்ளது? யோவின் நிலை என்ன? போன்ற எந்த விவரங்களும் தெரியவில்லை. எனினும் விரைவில் கிம்மின் உடல்நிலை குறித்து, வடகொரியா அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அம்மாடா கண்ணா!".. 'கொரோனா' தொற்றுள்ள 'பெண்ணுக்கு' பிறந்த 'குழந்தை'!.. 'வீடியோ காலில் பேசிய தாய்!'
- ‘உதவி செய்வதை நிறுத்திய அமெரிக்கா’... ‘கை கொடுக்க முன்வந்த சீனா’... 'சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்’!
- 'பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா!'.. 'தனிமைப்படுத்தப்பட்ட 43 காவலர்கள்'.. 'இழுத்து பூட்டப்பட்ட காவல் நிலையம்!'
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- கொரோனாவை 'சிறப்பாக' கையாளுவதில்... உலகிலேயே இவர்தான் 'பெஸ்ட்' தலைவர்... யாருன்னு பாருங்க!
- காபி போட்டு தர மறுத்த மனைவி.. கணவன் செய்த வெறிச்செயல்!.. பெங்களூருவில் பரபரப்பு!
- ஊரடங்கு நேரத்துல இப்டியா 'எல்லை' மீறுவீங்க?... 'திருமணமாகாத' ஜோடிக்கு கிடைத்த 'கடுமையான' தண்டனை!
- கடைசில 'சந்திர மண்டலத்துக்கு' போற மாதிரி 'ஆக்கிட்டாங்களே...' 'இருந்தாலும் பாதுகாப்புதான் முக்கியம்...' 'அசத்தும் தஞ்சை போக்குவரத்துக் கழகம்...'
- அமெரிக்காவில் 'இது' மட்டும் நடந்தால்... 'எச்சரித்த' அதிகாரியை 'கடுமையாக' சாடிய 'ட்ரம்ப்'... வெளியான 'புது' விளக்கம்...
- 'மருந்து இல்ல; ஆனா நோய் எதிர்ப்புச் சக்திக்காக இத குடிங்க!’.. 'அரசே வழங்கும்!'.. முதல்வர் அதிரடி!