மொத்தமா சோலிய முடிச்சிட்டாங்க.. செம ஃபார்மில் வடகொரிய ஹேக்கர்கள்! பயனாளர்கள் கடும் அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் வடகொரிய ஹேக்கர்கள் சுமார் 40 கோடி டாலருக்கு மேல் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செயினலிசிஸ் நிறுவனம்:
பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான செயினலிசிஸ் (Chainalysis) என்ற நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சைபர் திருட்டு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆச்சரியம் அளிக்கும் விதமாக 'இந்த ஆண்டு கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் குற்றவாளிகளுக்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக இருந்தது'.
சைபர் திருட்டிலும் வடகொரியா முதல் இடம்:
மேலும், இந்த ஆய்வு அறிக்கை வெளிவந்த உடன் எல்லோருடைய கவனமும் வடகொரியா பக்கம் திரும்பியது. ஏனென்றால், எப்போதும் ஏவுகணை என்று சொன்னால் மட்டுமே வடகொரியா ஞாபகம் வரும் நமக்கு கடந்த ஆண்டு சைபர் திருட்டிலும் வடகொரியா முதல் இடத்திற்கு வந்துள்ளது.
மோசடிகளின் எண்ணிக்கை உயர்வு:
மேலும், அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி பின்வருமாறு,
'2020 முதல் 2021 வரை, வட கொரிய-இணைக்கப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஏழாக உயர்ந்ததுள்ளது, மேலும் தற்சமயம் இந்த மோசடிகளின் மதிப்பு 40% அதிகரித்துள்ளது' என செயினலிசிஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கிரிப்டோ ஹேக்கர்கள் பெரும்பாலும் கிரிப்டோகரன்சி முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் செண்ட்ரலைஸ்ட் பரிமாற்ற தளங்களை குறிவைத்து கிரிப்டோ சொத்துக்களை திருடுகின்றனர்.
பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மெகா திருட்டு:
இந்த கிரிப்டோகரன்சியை திருடும் ஹேக்கர்கள் கவர்ச்சியான மின்னஞ்சல்கள், குறியீடு சுரண்டல்கள் மற்றும் மால்வேர் உள்ளிட்ட பல நுட்பங்களைப் பயன்படுத்தி, நிறுவனங்களின் 'ஹாட்' வாலட்களில் இருந்து நிதியைப் பெற்று, பின்னர் அவற்றை வட கொரியாவின் கட்டுப்பாட்டு முகவரிகளுக்கு மாற்றியுள்ளனர் என்று செயினலிசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இம்மாதிரியான கிரிப்டோ ஹேக்குகளிலிருந்து தப்பிக்க கிரிப்டோகரன்சி பயனாளர்கள் தங்களின் 'கோல்ட் வாலட்டுகளில்' உள்ள கிரிப்டோ முதலீடுகளை 'ஹாட் வாலட்டுகளுக்கு' மாற்றி வைக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் வடகொரியாவோ செயினலிசிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை மறுத்ததோடு, நாங்கள் கிரிப்டோகரன்சி ஹேக்குகளில் ஈடுபடுவதில்லை எனவும் வட கொரிய அரசு கூறுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சாப்பாடு தான் முக்கியம்னு சொல்லி 10 நாள் தான் ஆச்சு... அதுக்குள்ள வடகொரியா செய்துள்ள காரியம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்
- வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் 'புத்தாண்டு' உரை.. உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள 3 முக்கிய தீர்மானங்கள்!
- 11 நாள் 'சிரிக்கவும்' கூடாது, 'அழவும்' கூடாது...! 'மீறினா ஜெயில்ல பிடிச்சு போட்ருவோம்...' 'வடகொரியா கொண்டுவந்துள்ள அரசாணை...' - என்ன காரணம்...?
- இந்தியாவில் விரைவில் வருகிறது டிஜிட்டல் கரன்சி.. ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்..?
- கிம்-ஐ 'ஒத்த வார்த்தையால' கேவலமாக திட்டிய 'முன்னாள்' அதிபர்...! 'நேர்ல பாக்குறப்போ நல்ல சிரிச்சு பேசிட்டு...' - அங்க போய் 'என்ன' பண்ணியிருக்கார் பாருங்க...!
- 'சொல்றத சொல்லிட்டேன்...' 'அந்த நாட்டு' கலாச்சாரத்தை இங்க கொண்டு வராதீங்க...! அப்புறம் 'விளைவுகள்' ரொம்ப 'கொடூரமா' இருக்கும்...! - கிம் அரசு எச்சரிக்கை...!
- 'என்னங்க சொல்றீங்க...' இந்தியால மட்டும் இவ்ளோ பேரையா...? 'ஃபேஸ்புக் யூஸ் பண்றவங்களுக்கு இடியென இறங்கிய செய்தி...' 'ஒருவேளை அதுல நம்ம அக்கவுண்டும் இருக்குமா...' - கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்...!
- என்ன நடக்குது!?.. அபாயகரமான ரசாயணத்தின் அளவு 100 மடங்கு அதிகரிப்பு!.. பொதுத் தண்ணீரில் விஷம் கலந்த 'ஹேக்கர்ஸ்'!.. படுபாதக செயலால் மக்கள் பீதி!
- "மன்னிச்சுருங்க.. நான் அத செய்ய தவறிட்டேன்!".. 'நாட்டு மக்கள், ராணுவ வீரர்கள்' அத்தனை பேரையும் 'கண்கலங்க வைத்த' வடகொரிய அதிபரின் 'உருக்கமான' பேச்சு!
- “கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு!... இப்படியே போச்சுனா... நமக்கும் ஒரு ‘பாயாசத்த’ போட்ருவான்!..” - கிம்மின் சகோதரி ‘திடீர்’ மாயம்?.. ‘இதுதான் காரணமா?’