'எங்கள நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா'?... 'சீனாவிலிருந்து வீசிய 'மஞ்சள் தூசி'... தலைதெறிக்க வட கொரியா எடுத்த நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவிலிருந்து வீசும் மஞ்சள் தூசியால் கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக வட கொரியா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்களது நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என வட கொரிய அரசு ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறது. அங்கு என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்கு எதுவும் தெரியாத காரணத்தினால் உண்மையில் அங்கு கொரோனா இருக்கிறதா என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. கொரோனா பரவ ஆரம்பித்த ஜனவரி மாதம் முதல் தனது நாட்டின் எல்லைகளை மூடிய வட கொரிய அரசு, மக்கள் நடமாட்டத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனிடையே வட அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய தொலைக்காட்சி (கே.சி.டி.வி)  சிறப்பு வானிலை செய்திகளை ஒளிபரப்பியது, அப்போது சீனாவிலிருந்து மஞ்சள் தூசி வருவதை எச்சரித்த அந்த செய்தி, மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு எச்சரிக்கை செய்தது. அதோடு வெளிப்புற கட்டுமான பணிகளுக்கு நாடு தழுவிய தடையை அறிவித்தது. மஞ்சள் தூசி என்பது மங்கோலிய மற்றும் சீன பாலைவனங்களிலிருந்து வரும் மணல்காற்றை குறிக்கிறது, அவை ஆண்டின் சில நேரங்களில் வடக்கு மற்றும் தென் கொரியாவில் வீசுகின்றன. இது நச்சு தூசியுடன் ஒன்றிணைந்துள்ளது, பல ஆண்டுகளாக இரு நாடுகளிலும் சுகாதார கவலைகளை எழுப்பியுள்ளது.

இதற்கிடையே சீனாவிலிருந்து வீசும் "மஞ்சள் தூசி" காற்று கொரோனா வைரஸைக் கொண்டு வரக்கூடும் என்ற அச்சமே வட கொரிய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கக் காரணம் ஆகும். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தலைநகர் பியோங்யாங்கின் வீதிகள் வியாழக்கிழமை கிட்டத்தட்ட காலியாக இருந்தன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்