தெறிக்க விடும் வடகொரியா.. அந்த 'ரயில்'ல கொண்டு வாங்க.. ஜனவரியில் மட்டும் இது 4-வது தடவை.. அச்சத்தில் உலக நாடுகள்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரியா: வடகொரியாவை சேர்ந்த 5 மூத்த அதிகாரிகளின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெறிக்க விடும் வடகொரியா.. அந்த 'ரயில்'ல கொண்டு வாங்க.. ஜனவரியில் மட்டும் இது 4-வது தடவை.. அச்சத்தில் உலக நாடுகள்
Advertising
>
Advertising

உலக நாடுகளை ஒப்பிடும் போது அதிகளவில் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடுவது.என்னதான் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

North Korea test-fired 4 missiles in January month

பொருளாதார நெருக்கடி:

இதன் விளைவாக விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் வடகொரியா மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இனால் தற்போது வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.

ராணுவத் திறனை மேம்படுத்துவதில் கவனம்:

எந்த நெருக்கடியாக இருந்தாலும் நாங்கள் பண்ணுவதை தான் பண்ணுவோம் என்ற மேனிக்கு இந்த ஜனவரி மட்டும் 4 ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது வடகொரியா.மேலும், தனது ராணுவத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

பொருளாதார தடை:

அதுமட்டுமில்லாமல் ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்துள்ளது. இதனால் கடுமையான கோபத்தில் இருந்த அமெரிக்கா உடனடியாக, அந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது.

எந்த விதத்தில் அடித்தாலும் அதற்கு எதிர் வினை செய்யும் வடகொரியாவோ பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில், ரெயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது. அதோடு தொடர்ச்சியாக நேற்று வழிகாட்டி ஏவுகணைகளை சோதனை செய்ததாக, வடகொரியா கூறி உள்ளது.

NORTH KOREA, MISSILES, JANUARY, ஏவுகணை, ஜனவரி, வடகொரியா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்