எல்லா நாடுகளும் உயிர் பொழச்சா போதும்னு இருக்கையில... ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு தண்ணி காட்டிட்டு இருக்காரு!.. என்ன நடக்கிறது வட கொரியாவில்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் வடகொரியா தவித்து வருவதாக கூறப்படுவதற்கு பதிலடி அளிக்கும் வகையில், தலைநகர் பியாங்யாங்கில் மக்கள் வெளியிடங்களில் நடமாடுவது போன்ற காட்சிகளை அந்நாட்டின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 13-ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நிமிடம் நீளமுள்ள இரண்டு வீடியோக்கள், வடகொரிய அரசு ஊடகமான டிபி ஆர்கே (DPRK)இணையதளத்தில் பகிரப்பட்டிருந்தன.

இந்த வீடியோவில்  மக்கள் பலசரக்கு கடைகள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் மக்கள் அனைவரும் முகமூடிகள் அணிந்திருந்ததை பார்க்க முடிந்தது.

ஆனால் கொரோனா தொற்றை பற்றி நேரடியாக குறிப்பிடாமல், கடைகளில் போதுமான உணவுப் பொருட்கள் கையிருப்பு இருப்பதாக கடை ஊழியர் ஒருவர் கூறுவது போலவும், வாரத்திற்கு மூன்று முறை பொருட்கள் வாங்க கடைக்கு வருவதாக வாடிக்கையாளர் ஒருவர் கூறுவது போலவும் அந்த காணொளிகளில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தற்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை என வடகொரியா கூறி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த சில செய்திகளில், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் வடகொரியா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்