கிம் ஜாங் உன்_க்கு கொரோனவா...? 'ஏன்னா அந்த ஃபங்ஷனுக்கே அவர் வரல....' தென்கொரிய அமைச்சர் தகவல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வடகொரியா அதிபர் கொரோனா வைரசால் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம் என தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் சூசகமாக தெரிவித்த செய்தி உலக அளவில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சில உலக நாடுகளின் தலைவர்கள் எது செய்தாலும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். அதற்கு மிகவும் பெயர் போனவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். கடந்த சில நாட்களாகவே வடகொரிய அதிபர் அனைத்து ஊடகங்களின் பேசு பொருளாகவே மாறிவிட்டார்.

வடகொரியாவில் ஒவ்வொரு வருடமும் கிம் ஜாங் உன் அவர்களின் தாத்தா கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழா ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வெகு விமர்சையாக, கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாள் விழாவிற்கு அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாத செய்தி உலக நாடுகளுக்கிடையே சந்தேகத்தை தூண்டியது.

அதையடுத்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வடகொரியா அதிபர்  கிம் ஜாங் உன்க்கு  இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக செய்திகள் வெளியாயின.

அதை தொடர்ந்து அவரின் உடல்நிலை பற்றியும், ஒருவேளை கிம் ஜாங் உன் உயிரிழந்தாரா எனவும் உலக அளவில் ஊடகங்களில் விவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து தற்போது தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் வெளியே வருவதில்லை. அதிபருக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறியுள்ள செய்தி உலக அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்