“இது நம்ம நாட்டுக்குள்ளையும் நுழைஞ்சிருச்சு”.. பரபரப்பு தகவலை வெளியிட்ட வடகொரிய அதிபர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிய கொரோனா தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் வடகொரியா நாடு மட்டும் அங்கு கொரோனா தொற்று இல்லை என மறுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே நடமாடக்கூடாது என மக்களுக்கு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு மக்களிடம் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ‘தீவிரமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. நமது தேசத்தில் ஒமைக்ரான் வைரஸ் சத்தமில்லாமல் நுழைந்துவிட்டது. அதனால் நாடு முழுவதும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்படுகிறது. நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகிறது. மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்’ என அவர் பேசியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அட, அதிபர் கிம் ஜாங் பண்ண விஷயமா இது??.." பெண் செய்தியாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி ..
- Ukraine - Russia Crisis : "இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமே அவங்க தான்.." வட கொரியா வெளியிட்ட கருத்தால் அதிர்ச்சி
- வடகொரிய அதிபர் வெறுக்கும் ஒரு பாறை.. அந்த தீவு மேல அப்படி என்ன தான் கடுப்பு? எல்லா ஏவுகணையையும் அங்கையே அனுப்புறாரு
- எப்பவும் மாட்டுக்கறி தான் சாப்பாடு.. இது நடுவுல, ஜாலியா படம் பாத்து ரசிச்சு இருக்காராம்.. வடகொரியா அதிபர் குறித்த புதிய தகவல்
- தெறிக்க விடும் வடகொரியா.. அந்த 'ரயில்'ல கொண்டு வாங்க.. ஜனவரியில் மட்டும் இது 4-வது தடவை.. அச்சத்தில் உலக நாடுகள்
- சாப்பாடு தான் முக்கியம்னு சொல்லி 10 நாள் தான் ஆச்சு... அதுக்குள்ள வடகொரியா செய்துள்ள காரியம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்
- வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் 'புத்தாண்டு' உரை.. உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள 3 முக்கிய தீர்மானங்கள்!
- ஐயோ, அவரா இது...? 'எப்படி' இருந்த மனுஷன்...? ஆள் 'அடையாளம்' தெரியாத அளவுக்கு 'சேஞ்ச்' ஆன வடகொரிய அதிபர்...! ஏன் இப்படி ஆயிட்டாரு...? - வைரல் ஃபோட்டோ...!
- கண் இமைக்கும் நேரத்துக்குள்ள 'கடல்'ல வந்து விழுந்துச்சு...! 'கண்டிப்பா இது அவங்க வேலை தான்...' 'எப்போ என்ன நடக்கும்ன்னு தெரியலையே...! - அச்சத்தில் உலக நாடுகள்...!
- ரொம்ப 'ஆபத்தா' போய்கிட்ருக்கு...! 'இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல...' இந்த நேரத்துல 'ஏவுகணை' சோதனை ரொம்ப முக்கியமா...? - எச்சரிக்கும் ஐநா அதிகாரிகள்...!