Ukraine - Russia Crisis : "இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணமே அவங்க தான்.." வட கொரியா வெளியிட்ட கருத்தால் அதிர்ச்சி

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் ராணுவ தாக்குதல், உலக நாடுகள் மத்தியில், கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, உக்ரைன் நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், ரஷ்யாவிற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

அதே போல, பிரிட்டன் நாட்டின் விமானங்கள், ரஷ்ய விமான நிலையம் மற்றும் வான்வெளியை பயன்படுத்த ரஷ்ய அரசும் தடை விதித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்

மேலும், உக்ரைனுக்கு இந்த போரில் ராணுவ உதவி புரியும் நாடுகள், கடும் பின் விளைவுகளை சந்திக்கும் என்றும் ரஷ்யா தொடர்ந்து எச்சரிக்கை மேற்கொண்டு வருகிறது. ஐ. நா பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது. 15 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அந்த கவுன்சிலில், 11 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தன. சீனா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் வாக்களிக்கவில்லை.

வட கொரியா அறிக்கை

என்ற போதிலும், நிரந்தர உறுப்பினரான ரஷ்யா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நீக்கியது. இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரத்தில், அமெரிக்கா மீது வட கொரிய நாடு குற்றம் சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'ரஷ்யா தனது பாதுகாப்பு பற்றி, தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தது. உக்ரைன் நோட்டோவில் இணையக் கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியாமாமானது தான். ஆனால், அந்த கோரிக்கைகளுக்கு மேற்கத்திய நாடுகள் செவி சாய்க்கவில்லை. அமெரிக்கா நேட்டோ வாயிலாக, மறைமுகமாக தனது ராணுவ பராக்கிரமத்தை நிறுவ முயன்றது.

பின் வாங்கிய அமெரிக்கா

அமெரிக்காவின் இந்த ஆணவ போக்கும், தேவையற்ற மத்தியஸ்தமும் தான் உக்ரைன் பிரச்சனைக்கு வித்திட்டது. அமெரிக்கா இரட்டை கொள்கையுடன் செயல்பட்டு, உக்ரைன் போன்ற சிறிய நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு, அமைதி என்ற போர்வையில் அவற்றை தவறாக வழி நடத்துகிறது. ஆனால், இன்று தாக்குதல் என்ற நிலை வந்ததும் உக்ரைன் நாட்டிற்கு ராணுவ உதவி எதுவும் வழங்காமல், பின் வாங்கிக் கொண்டது.

சிறிய நாடுகள்

உக்ரைன் மீது தாக்குதல் நிகழ, அமெரிக்கா தான் காரணம். இதிலிருந்து சிறிய நாடுகள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உங்களிடம் பலம் இல்லாவிட்டால், நீங்கள் வருந்த வேண்டியிருக்கும் என்பதே தான் அது. இந்த தாக்குதலின் முக்கிய கருத்தும் அது தான்' என வடகொரியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் போர் தாக்குதலுக்கு, சீனா, பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது வடகொரியாவும் சேர்ந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க ஆதரவு நாடான தென் கொரியா, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RUSSIA UKRAINE CRISIS, NORTH KOREA, AMERICA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்