'தேவையில்லாம சிறுத்தைய சீண்டி பாக்காத'!.. அமெரிக்காவை அசால்ட்டாக டீல் பண்ணும் 'கிம்' சகோதரி!.. நம்ம எல்லாருக்கும் கூட 'அக்கா' ஒரு 'சர்ப்ரைஸ்' வச்சிருக்காங்களாம்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவுடன் தற்போது வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று கிம்மின் சகோதாரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தை தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்திருக்கிறார், வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங்.
இதுகுறித்து கிம் யோ ஜாங் கூறியதாவது:-
அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவை இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால், அது ஒரு தரப்பின் பெருமைக்காக மட்டுமே இருக்கும். தனது நாட்டுக்கு அமெரிக்காவை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை.
இந்த ஆண்டு தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே மற்றொரு சந்திப்பு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் நடக்கக்கூடும்.
அணுசக்தி மயமாக்கல் சாத்தியமில்லை என்று அர்த்தமல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆனால், நாங்கள் சொல்வது என்னவென்றால், இந்த நேரத்தில் அது சாத்தியமில்லை.
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு சிறிய நோக்கமும் எங்களுக்கு இல்லை. அவர்கள் எங்களை தனியாக விட்டுவிட்டு, எங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் செய்யாவிட்டால் எல்லாம் சீராக நடக்கும். டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்களிடமிருந்து தொடர் மோதல் மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் கலவையான செய்திகள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதா அல்லது ஜனாதிபதியின் அதிகாரத்தின் பிடியின் விளைவாகவா என்பது தெளிவாக தெரியவில்லை.
டிரம்பிற்கு வாழ்த்துக்களை அனுப்பவும், அவரது பணியில் வெற்றி பெற வாழ்த்துக்களை அனுப்பவும் தனது சகோதரர் அறிவுறுத்தினார். ஆனால் தலைவர்களுக்கிடையிலான உறவு நன்றாக இருந்தாலும், அமெரிக்கா விரோதப் போக்கிற்குத் திரும்பும், டிரம்பைத் தவிர வேறு தலைவர்களுக்கான தனது கொள்கைகளை வடகொரியா வடிவமைக்க வேண்டும் என்று கிம் யோ ஜாங் கூறினார்.
வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார்.
அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.
மற்ற செய்திகள்
75 லட்சம் கோடி 'வருமானம்'... 11 நாடுகள்ல '36 லட்சம்' பேரை வேலை வாங்குறது... 58 'இந்தியர்'கள் தானாம்!
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' தடுப்பூசி? கூடாது...! அபார்ஷன்? கூடவே கூடாது...! - அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கும் 'அதிரடி' வேட்பாளர்! - 'அதிர்ச்சியில்' டிரம்ப், ஜோ பிடன்!
- இந்தியர்கள் மேல் 'இடியாக' இறங்கிய... டிரம்ப்பின் 'அடுத்த' அதிரடி அறிவிப்பு! - கலங்கி நிற்கும் இந்திய மாணவர்கள்!
- 'கொஞ்சம் பின்னாடி போங்க மேடம்'... 'இப்ப ஓகே வா!?'.. கண் இமைக்கும் நேரத்தில்... உயிரை உறைய வைத்த கோரம்!
- 'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'!
- 'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்!'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்!
- "ஊரடங்கு இன்னும் முடியல!.. அதனால".. 'எச்1பி, எச்4' விசா விவகாரத்தில் 'டிரம்ப்' எடுத்துள்ள பரபரப்பு முடிவு!
- 'நாங்க கடவுளா வணங்குற 'கிம்'-ஐ... Bloody pig என்று சொன்னார்கள்!'.. கொந்தளித்த வட கொரியா!.. வெறும் சிகரெட் துண்டுகளால் 'செம்ம' பதிலடி!
- வடசென்னை அருகே பயங்கரம்!.. சாலையில் திடீரென பற்றி எரிந்த ஆட்டோ... வெடித்து சிதறிய பொருட்கள்... விசாரணையில் அம்பலமான பகீர் தகவல்!
- "இந்த கொரோனா நேரத்துலயும், நெஞ்சுல பாலை வார்த்துட்டாங்க!"... 22 பில்லியன் டாலர் முதலீட்டில் அசத்திய 155 இந்திய நிறுவனங்கள்! .. நெகிழ்ந்துபோன அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
- "பாய்ஸ்.. நல்ல ஆக்ஷன் பிளாக் மாட்டியிருக்கு.. ரெடியா இருங்க வெச்சு செய்வோம்!".. கிம் ஜாங் உன்னின் சகோதரி எடுத்த அதிரடி முடிவு!