"அட, அதிபர் கிம் ஜாங் பண்ண விஷயமா இது??.." பெண் செய்தியாளருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி ..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிழக்கு ஆசிய நாடான வடகொரியாவின் தற்போதைய அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். உலக நாடுகள் மத்தியில், கிம் ஜாங் உன் பெயர் மிக மிக பிரபலம்.

Advertising
>
Advertising

Also Read | நாசா பகிர்ந்த ஃபோட்டோ.. "இது.. அதோட கால்தடம் மாதிரியே இருக்கே.." அரண்டு போன நெட்டிசன்கள்

பல நாடுகள் எதிர்ப்பினை மீறி, ஏவுகணை, அணு ஆயுத சோதனைகள் ஆகியவற்றை தொடர்ந்து நிகழ்த்தி கொஞ்சம் கூட அசராமல் செயல்பட்டு வருபவர் கிம் ஜாங் உன்.

அது மட்டுமில்லாமல், தன்னுடைய நாட்டில் சட்ட திட்டங்களை மீறும் மக்களுக்கு கிம் கொடுக்கும் தண்டனைகளும் பெரிய அளவில் உலக நாடுகளால், பரபரப்பாக பார்க்கப்படும்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த கிம் ஜாங்

அந்த அளவுக்கு பெயர் போன வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தற்போது செய்துள்ள விஷயம் ஒன்று, தற்போது மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. வடகொரியாவின் அரசு செய்தித் தொலைக்காட்சியில் மூத்த தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ரி சுன் ஹி. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வரும் ரி சுன் ஹி, 1994 ஆம் ஆண்டு, கிம் ஜங் உன்கின் தாத்தா கிம் இல் சுங் மரணம், 2006 ஆம் ஆண்டு நடந்த அணு ஆயுத சோதனை உள்ளிட்ட வடகொரியாவின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ரி சுன் தான் தொகுத்து வழங்கி உள்ளார். செய்திகளின் நிலைக்கேற்ப அதனை வழங்குவதில் ரி சுன் ஹி புகழ் பெற்றவர். அதே போல, அவரின் பாரம்பரிய உடைத் தேர்வும் பெரிய அளவில் பிரபலம்.

இந்நிலையில், ரி சுன் ஹிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். இது தொடர்பாக, வடகொரியா செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பியாங்யாங்கில் ஆற்றங்கரை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடை, ரி சுன் ஹியிடம் கிம் ஜாங் ஒப்படைத்தார். ரி சுன் கையை பிடித்தபடி, வீட்டுக்குள் கிம் ஜாங் வரும் புகைப்படங்களும் வெளியாகி, அதிகம் வைரலாகி வருகிறது. ரி சுன் போல, நாட்டில் சிறப்பாக சேவை செய்த பிறருக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது.

எங்க நாட்டோட பொக்கிஷம்

நாட்டின் பொக்கிஷங்களில் ஒருவர் என ரி சுன் ஹியை, கிம் ஜாங் பாராட்டி உள்ளார். சிறு வயதில் இருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கட்சியின் புரட்சிகர அறிவிப்பாளராக பணியாற்றிய ரி சுன் ஹி மற்றும் நாட்டிற்கு சேவையாற்றிய மக்களுக்கு மரியாதையை வழங்கும் வகையில், இந்த பரிசு வழங்கப்பட்டதாக அதிபர் கிம் ஜாங் தெரிவித்தார் என வடகொரிய செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது. வடகொரியாவின் நிறுவனரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் 110 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த பரிசினை அனைவருக்கும் கிம் ஜாங் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகிறது.

இது பற்றி பேசும் ரி சுன் ஹி, "பங்களா சொகுசு ஹோட்டல் போல உள்ளது. இந்த பரிசை நினைத்து நானும், எனது குடும்பத்தினரும் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தோம்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "அவர்கிட்ட இருந்து கத்துக்கோங்க.." அஸ்வினை மறைமுகமாக சீண்டிய யுவராஜ் சிங்??.. கமெண்ட்டில் கொந்தளித்த ரசிகர்கள்

NORTH KOREA, KIM JONG UN, GIFT, LUXURY APARTMENT, NEWS ANCHOR, வடகொரியா, கிம் ஜாங் உன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்