அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்!?.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு!.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்கிம் ஜாங் உன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீப நாட்களாக வெளி உலகிற்கு வரவில்லை. கடந்த 15ம் தேதி நடைபெற்ற வடகொரியாவின் நிறுவனரும், தனது தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிம் ஜாங் அன் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 2011-ம் ஆண்டு தலைவராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் ஜாங் அன் தவிர்த்ததால், இது பல சந்தேகங்களை எழுப்பியது.
40 வயதுக்குள் இருக்கும் அதிபர் கிம்முக்கு அதீதமான புகைப்பழக்கம், உடல் பருமன், உடல்சோர்வு உற்சாகமின்மை, அதிக தூக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டார். இதனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சிஎன்என் சேனல் செய்தி வெளியி்ட்டது.
இந்நிலையில், கிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன வெளியுறவு துறையின் மூத்த உறுப்பினர் தலைமையிலான தூதுக்குழு நேற்று முன்தினம் பீஜிங்கில் இருந்து வட கொரியாவுக்கு புறப்பட்டதாக வடகொரியா விவகாரங்களை கையாளும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஓய்வு வேளையில் சோர்வை கலைக்க... 'சீட்டாட்டம்' ஆடிய ஓட்டுநர்கள்!.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்!.. என்ன நடந்தது?
- 'நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்' என்றால் என்ன?.. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள்... வெளிநாடு செல்வதில் சிக்கல்!?.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!
- #Covid19India: 'லாக்டவுனில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது 95% அதிகரிப்பு!'.. 'வாட்ஸ் ஆப், கூகுள், ட்விட்டருக்கு நோட்டீஸ்!!'
- 'ஒரே ஒரு துண்டு தான்!'.. முடிதிருத்தம் செய்ய வந்தவர்களுக்கு கொரோனா பரவியது எப்படி?.. கிராமத்துக்கே 'சீல்' வைத்த... சலூன் கடை சம்பவம்!
- 'தமிழகத்தில்' 6 மாநகராட்சிகளில்.. 'அமலுக்கு வந்த' 4 நாள் முழு ஊரடங்கு!.. கொரோனாவுக்கு எதிரான மனிதப் போராட்டம் தீவிரம்!
- “ஐ லவ் யூ.. நீ எனக்கு குடுத்தது சிறந்த வாழ்க்கை”..'கொரோனா சிகிச்சையில் இறந்த கணவர் மனைவிக்காக விட்டுச்சென்ற உருக்கமான ஆடியோ பதிவு!'
- '2 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி...' 'திகைத்து நிற்கும் வல்லரசு நாடுகள்...' '21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனித உயிரிழப்பு...'
- 'சீனாவில் 4 மடங்கு பாதிப்பு அதிகமிருக்கலாம்...' '7 முறை திருத்தப்பட்ட அளவீடுகள்...' ‘ஹாங்காங் ஆய்வாளர்கள் தகவல்...'
- ‘டாக்டர் சைமன் மனைவியின் கோரிக்கை நிராகரிப்பு’... ‘சென்னை மாநகராட்சி விளக்கம்’... ‘உலக சுகாதார அமைப்பை மேற்கோள் காட்டிய மனைவி’ !
- 'தொடர்ந்து 20 முறையும் பாசிட்டிவ்'... '21 முறை நெகட்டிவ்'... 'நாட்டையே ஆச்சரியப்படுத்திய கேரளா'... சாதித்தது எப்படி?