பல நாடுகள் 'நடுங்கி' போய் கெடக்கு...! 'தயவு செஞ்சு இனிமேல் இப்படி பண்ணாதீங்க...' - ஐ.நா சபையில் வைத்து 'லெஃப்ட் ஹேண்டில்' டீல் செய்த வடகொரியா...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை பரிசோதனை செய்துக்கொண்டிருந்த வடகொரியா (North Korea) குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் இன்று (28-09-2021) அதிகாலை ஏவியுள்ளது என்று தென்கொரிய (South Korea) ராணுவம் அறிவித்துள்ளது .

தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியாவின் தூதர் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தெரிவித்துள்ள சூழ்நிலையில் இந்த ஆயுத சோதனை நடந்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மாற்று க்ரூஸ் ஏவுகணை ஆகியவற்றை வட கொரிய அரசு சோதனை செய்திருந்தது.

சில தினங்களுக்கு முன்பு தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் விரும்புவதாகவும் வடகொரியா அரசு தரப்பில் சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள அமெரிக்க ராணுவம், அமெரிக்கப் படையினருக்கோ அதன் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த சேர்ந்தவர்களுக்கோ வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.

இப்படி தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா அதற்கு முழு உரிமை உள்ளதாக வாதிட்டுள்ளது. வடகொரியா கடந்த பல ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தும் விதமாக தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நடந்து வரும் ஐ.நா சபை 76-வது பொதுக்கூட்டத்தில் பல நாடுகளும் உரையாற்றி வருகின்றன. இந்த கூட்டத்தில் வடகொரியாவின் அணு ஆயுத சோதனை குறித்து பேசிய அந்நாட்டின் தூதர் கிம் சாங் 'அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு தனது ஆயுதத்தை சோதித்து பார்க்க உரிமை உள்ளது. நாட்டில் அமைதி மற்றூம் பாதுகாப்பு நிலவவும் எங்கள் தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்