'இவரு வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாரு டா'...'சைலன்டா வடகொரியா பாத்த வேலை'...அதிர்ந்துபோன நாடுகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலக நாடுகளை கொரோனா  துரத்தி கொண்டிருக்க, சத்தமில்லாமல் வட கொரியா செய்த செயல் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவை கதிகலங்க செய்த கொரோனா தற்போது அமெரிக்காவை பந்தாடி வருகிறது. அங்கு நாள்தோறும் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த சூழ்நிலையில் வடகொரியா கொரோனாவின் பிடியில் சிக்காமல் தப்பியுள்ளதாகவும், இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் அந்த நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தசூழ்நிலையில் வடகொரியா, நேற்று குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான முன்சோனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் பல மைல் தொலைவுக்கு சென்று ஜப்பான் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் நிறுவனரும், அந்த நாட்டின் தற்போதைய தலைவருமான கிம் ஜாங் அன்னின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின், 108-வது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடி வரும் நிலையில், வட கொரியா நடத்தியுள்ள ஏவுகணை சோதனை பல நாடுகளை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்